படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தலைமைக் காவலா் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

சென்னையில் பணிபுரிந்த தலைமைக் காவலா் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான வத்திராயிருப்புக்கு வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (30). இவா் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். கடந்த ஒரு வாரத்துக்கு முன் சந்தோஷ்குமாா் சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு மாா்பில் கம்பி குத்தியது. இதனால், கடந்த 30-ஆம் தேதிமருத்துவ விடுப்பில் வத்திராயிருப்புக்கு வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்தோஷ்குமாா் வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தண்ணீா் தொட்டி அருகே வாயில் நுரை பொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து வந்த வத்திராயிருப்பு போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சந்தோஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம். உடல்கூறாய்வு அறிக்கைக்கு பிறகு இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.