மாரம்பாடி... திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள சற்றே பெரிதான ஒரு கிராமம். இக் கிராமத்துக்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்க்கும் சக்தி வந்ததற்குக் காரணம் புனித அந்தோணியார்.
இங்கு அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் வயது 300 ஆண்டுகள். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 16, 17, 18-ம் நாள்களில் இங்கு நடைபெறும் மாபெரும் திருவிழாவுக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் கூடுவது கண்கொள்ளாக் காட்சி. புனித அந்தோணியாரின் பெயரில் விளங்கும் ஆலயங்களில் இந்தியாவில் மட்டுமல்லாது அகில உலகத்திலும் இதுவே பெரிய ஆலயம் என்று கூறப்படுகிறது.
இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் பிற மதங்களைச் சார்ந்தவர்கள் என்பது சிறப்புச் செய்தி. அந்தோணியாரின் பெயரில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அளப்பரியது.
இந்த ஆலயம் இந்தியாவின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று. இப்போது திருத்தலமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திலிருக்கும் அந்தோணியாரின் திருவுருவச் சிலை, 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வாணிபம் செய்வதற்காக வந்த வெளிநாட்டு மாலுமிகளால் கொண்டுவரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக இங்கிருக்கும் அந்தோணியார் செய்திருக்கும் புதுமைகள் எண்ணிலடங்காதவை.
எகிப்து நாட்டிலுள்ள ஃபயூம் என்ற ஊரிலுள்ள கோமா என்ற நகரத்தில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர் அந்தோணியார். பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இயேசுவின் சீடர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்களைப் போல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டவர். கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு தனது செல்வம் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு துறவியாக மாறியவர்.
நைல் நதியைக் கடந்து சென்று அங்கு ஒரு பழைய கோட்டையில் தனியறையில் 20 ஆண்டுகள் பிற மனிதர்களின் முகத்தைக் கூடப் பார்க்காதவராகத் துறவற வாழ்க்கையை மேற்கொண்டவர். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள் அவரைப் பார்க்கும் ஆசையில் அங்கு வந்தனர். ஆனாலும் வெகுகாலத்துக்கு யாரையும் பார்க்க மறுத்து பிரார்த்தனையிலேயே காலத்தைக் கழித்தார். நாளுக்கு நாள் அவரைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை பெருகியதால் வேறு வழியின்றி வெளியே வந்தார். அப்படி வந்தவரைத் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டு பலர் அங்கேயே தங்கி அவருக்கும் இறைவனுக்கும் தொண்டு செய்ய ஆரம்பித்தனர். அவரை குருவாக ஏற்றுக்கொண்டவர்களின்
எண்ணிக்கை பெருகி அவர்களும் அவரைப்போலவே துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இப்படி ஒரு குரு பரம்பரை வளர்ந்தது. அவர்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று இறைப் பற்றை மக்களிடையே வளர்த்தனர். அந்தோணியார் தமது 105-வது வயதில் காலமானார். அவருடைய விருப்பப்படியே அவரது கல்லறை இருக்கும் இடம் யாருக்கும் அறிவிக்கப்படவேயில்லை. தனது கல்லறைக்கு வந்து யாரும் அஞ்சலி செலுத்துவதையும் கூட்டம் போடுவதையும் அவர் தவிர்க்க விரும்பியதால் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்தார்.
செவ்வாய்க்கிழமை அந்தோணியார் நாளாக உலகெங்கும் கருதப்படுவதை முன்னிட்டு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு சிறப்புப் பிரார்த்தனை நடைபெறும். அச் சமயத்தில் ஊமைகள் பேசுவதும், பார்வையற்றவர்களுக்குப் பார்வை கிடைப்பதும் நோயுற்றவர்கள் நலம்பெறுவதுமான அரிய காட்சிகளை ஏராளமாகப் பார்க்கலாம்.
மேலும் இந்த ஆலய குருக்கள் இளைஞர் நலச்சங்கம், வின்சென்ட் தே பவுல் சபை, மக்கள் நலச் சங்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி பொதுமக்களுக்குத் தங்களால் இயன்ற அளவுக்குச் சேவைகள் செய்து வருகிறார்கள். ஆலயப் பொறுப்பில் மூன்று பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டு கல்விச்சேவையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம விருதுகளுக்கு ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



