முரண்சுவை - 3: மாணவரிடம் தோற்ற கல்வித் தந்தை!
தமி ழ கத் தில் 1954-ம் ஆண்டு மூத றி ஞர் ராஜா ஜிக் குப் பிறகு பெருந் த லை வர் காம ராஜ் முத ல மைச் ச ரா கப் பதவி ஏற் றார். அப் பொ ழுது கல்வி அமைச் ச ராக இருந் த வர் சி.சுப் ர ம ணி யம். அந்த சம யத் தில்


தமி ழ கத் தில் 1954-ம் ஆண்டு மூத றி ஞர் ராஜா ஜிக் குப் பிறகு பெருந் த லை வர் காம ராஜ் முத ல மைச் ச ரா கப் பதவி ஏற் றார். அப் பொ ழுது கல்வி அமைச் ச ராக இருந் த வர் சி.சுப் ர ம ணி யம். அந்த சம யத் தில் குழந் தை க ளுக் குப் பள் ளிக் கூ டத் தில் மதிய உணவு திட் டத்தை காம ரா ஜர் கொண் டு வந் தார். அதன் மூலம் கஷ் டப் ப டு கின்ற குழந் தை க ளுக் கெல் லாம் வயி ராற உணவு கிடைத் தது.
அந் தக் காலத் தில் மாண வர் கள் பணம் கட் டிப் படித் தார் கள். என் னைப் போன்ற சில மாண வர் கள் பணம் கட் டா மல் படித் தோம். கார ணம் எங் க ளு டைய பெற் றோர் கள் அர சாங் கத் தில் பணி பு ரிந் த தால் பணம் கட் டத் தேவை இல்லை என் கிற விசேஷ சலுகை. 1963-ம் ஆண்டு மாண வர் கள் படிப் ப தற்கு இனி மேல் பணம் கட் டத் தேவை யில்லை என்று காமராஜர் அறி வித் தார். அதற் கு தான் இல வ சக் கல்வி என்று பெயர்.
அப் போது கல்வி கற்ற ஒரு மாண வ னின் பெயர் சீனி வா சன். அவர் தான் தி.மு.க.வின் சார் பில் 1967-ல், காம ரா ஜ ருக்கு எதி ராக விரு து ந க ரில் நடந்த பொதுத் தேர்த லில் நிறுத் தப் பட் ட வர். மாண வர் கள் வீடு வீடா கச் சென்று உத ய சூ ரி யன் சின் னத் திற் காக ஓட்டு சேக ரித் த னர்.
நாட் டிற் காக உழைத்த உத் த மர் காம ரா ஜர் அந்த மாண வ ரால் அவ ரது சொந்த ஊரான விருதுநக ரி லேயே தோற் க டிக் கப் பட் டார்.
இந்த தேர் தல் முடி வைக் கேட்டு அதிர்ச் சி ய டைந்த காங் கி ரஸ் தொண் டர் கள் காம ரா ஜ ரி டம் சென்று ""ஐயா ஒரு மாண வ னி டமா நீங் கள் தோற் பது? இது தான் ஜன நா ய கமா? '' என்று கொதித் துக் கேட் டி ருக் கி றார் கள்.
அதற் குக் காம ரா ஜர் ""இது தான் ஜன நா ய கம். இதற் கா கத் தான் வெள் ளைக் கா ர னோடு போராடி சுதந் தி ரம் வாங் கி யி ருக் கி றோம். இப் பொ ழு து தான் நான் மன நி றை வோ டி ருக் கி றேன்'' என் றார்.
"தனக் கா கவே வாழ்ந்து, தனக் கா கவே ஒரு வன் இறந் தால் அவனது இழப்பு இறகை விட லேசா னது. மக் க ளுக் கா கவே வாழ்ந்து மக் க ளுக் கா கவே ஒரு வன் இறந் தால் அவனது இழப்பு மலையை விட கன மா னது' என் றார் சீனத் தலை வர் மாசே துங். எனவே காம ரா ஜ ரின் இறப்பால் ஏற்பட்ட இழப்பு இமய மலை யை விட கன மா னது.
1971-ம் ஆண்டு என்று நினைக் கி றேன். அப் பொ ழுது கலை ஞர் முத ல மைச் ச ராக இருந் தார். சீனி வா சன் அவர் க ளுக்கு சென்னை ஆபட்ஸ் பரி மாளி கை யில் திரு ம ணம் நடை பெற் றது.
சீனி வா ச னு டைய அக் காள் சீத் தம் மாள் என் ப வர் கல்வி அதி கா ரி யாக வேலை பார்த் த வர். அவ ரி டம் என் னு டைய சித்தி வேலை பார்த் தார். எனவே சித் தி யு டன் நானும் திரு ம ணத் திற்கு சென் றி ருந் தேன்.
ஸ்ரீதர் இயக் கத் தில் வெளி வந்த "தேன் நி லவு' படத் தில் நடித்த வஸந்தி என் கிற நடி கை யைத் தான் சீனிவாசன் திரு ம ணம் முடித் தார். பெண் ணுக் குத் தோழி போல நடிகை சாவித் திரி முக் கி யப் பங்கு வகித் தார்.
முத ல மைச் சர் கலை ஞர் உட் பட அனைத்து அமைச் சர் க ளும் திரு மண மண் ட பத் தில் மேடை யில் அமர்ந் தி ருந் த னர். மக் கள் தில கம் எம்.ஜி.ஆரும் மேடை யில் அமர்ந் தி ருந் தார். அவ ரது மடி யில் 7 வயது மதிக் கத் தக்க ஒரு பெண் குழந்தை உட் கார்ந் தி ருந் தது. அவர் ஏதோ படப் பி டிப் பில் கலந்து கொண்டு அதே உடை யில் வந் தி ருந் தார்.
எம்.ஜி.ரைப் பார்த் த வு டன் அவர் அருகே சென்று அவ ரது தோள் பட் டை யில் அன் பா கக் குத் திப் பார்த் தேன்.
அவ ரது தோள் தேக் கு ம ரம் போல உறு தி யாக இருந் தது. நல் ல வேளை உத வி யா ளர் ராம கி ருஷ் ணன் என்னை கவ னிக் க வில்லை. நான் தப் பித் தேன். பின் நாட் க ளில் மக் கள் தில கத் து டன் எனக் குப் பழ கும் வாய்ப்பு கிடைக் கு மென்று நான் நினைத் துக் கூ டப் பார்க் க வில்லை. கலை ஞர் 1983-ம் ஆண்டு என் னு டைய திரு ம ணத் திற்கு வருகை தந் தி ருந் தார். அதை யும் அன்று நான் நினைத் துப் பார்க் க வில்லை.
அன்று சீனி வா ச னு டைய திரு ம ணத் திற்கு பெருந் த லை வர் காம ரா ஜர் வந் தி ருந் தார். காம ரா ஜர் உள்ளே நுழைந் த தும் கலை ஞர் உட் பட அனை வ ரும் எழுந்து நின்று வணங் கி னார் கள்.
திரு ம ணக் கூட் டத் தில் உள் ள வர் க ளி லும் பெரும் பா லோர் எழுந்து நின் ற னர். ஆபட்ஸ் பரி மாளிகை ஒரே கர கோ ஷ மாக இருந் தது. திரு ம ணம் முடிந்து, சிறிது நேரத் தில் காம ரா ஜர் மண மேடைக்கு அரு கில் நின்று கொண்டு திரு ம ணத் தில் கலந்து கொண்ட முக் கி ய மா ன வர் க ளி டம் பேசிக் கொண்டு இருந் தார். நான் காம ரா ஜர் பக் கத் தில் நின்று அவரை தரி சித் துக் கொண் டி ருந் தேன். அன்று எனக்கு அந்த பாக் கி யம் கிடைத் தது. அதன் பிறகு அவர் மிகச் சாதா ர ண மாக அங் கி ருந்து தனி யா கப் புறப் பட் டுப் போனார்.
1997-ம் ஆண்டு என்று நினைக் கி றேன். நாஞ் சில் கி.மனோ க ரன் அவர் க ளைப் பார்ப் ப தற் காக தலை மைச் செய ல கத் திற் குச் சென் றி ருந் தேன். நாஞ் சி லார் எப் பொ ழு தும் என் னி டம் பல் வேறு விஷ யங் கள் பற்றி பேசு வார். ""ராஜேஷ் சனி, ஞாயிறு நாட் க ளில் என் னு டைய வீட் டிற்கு வாருங் கள். நிறைய விஷ யங் கள் பற்றி விவா திப் போம்'' என்று கூறு வார்.
அன்று அவ ரது அறை யில் நான் உட் கார்ந் தி ருக் கும் பொழுது ஒரு மனி தர் அவ ரைப் பார்க்க வந் தார். அவர் சென் ற வு டன் ராஜேஷ், அவர் யார் என்று தெரிந் ததா என்று கேட் டார். ""எனக் குத் தெரி ய வில்லை'' என் றேன். ""அவர் தான் விரு து ந கர் சீனி வா சன். காம ரா ஜரை எதிர்த்து தேர்த லில் நின் ற வர்'' என் றார்.
அந்த சீனி வா சன் தன் னு டைய பெயரை பிர ப லப் ப டுத் திய தி.மு.க.வில் இருந்து வில கிச் சென்று, அ.இ.அ.தி.மு.க- வில் போய் சேர்ந் தார். பிறகு இறு தி யாக தி.மு.க- விலேயே வந்து இணைந் தார். இன்று அவர் இருக் கி றாரா இல் லையா என் ப து கூட பல ருக் குத் தெரி யாது. உண்மை என் ன வென் றால் அவர் இரண் டாண் டு க ளுக்கு முன்பு தான் மர ண ம டைந் தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...