இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை-6: பொம்மைத் துப்பாக்கியில் தொடங்கி...!

ஜவகர்லால் நேரு ஒரு முறை ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் சுற்றுப்பயணம் கிளம்பியபோது அவருடைய பேரன்களான ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி இருவரும் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகள் வாங்கி வரச் சொன்னார்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:34 am

ராஜேஷ்

ஜவகர்லால் நேரு ஒரு முறை ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் சுற்றுப்பயணம் கிளம்பியபோது அவருடைய பேரன்களான ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி இருவரும் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகள் வாங்கி வரச் சொன்னார்கள் (Air gun). பேரன்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேரு இரண்டு துப்பாக்கிகள் வாங்கி வந்தார்.

அப்போதைய சட்டதிட்டத்தின்படி, டெல்லியில் வந்து இறங்கியதும் சுங்க இலாகாவில் இதைக் காண்பித்து வரி செலுத்த வேண்டும். நேருவிடம் இந்தப் பொருட்களை முறைப்படி வாங்கி வரி விதிக்க சுங்க இலாகா அதிகாரிகள் தயங்கி நின்றனர். இதைக் கவனித்த நேரு தன்னுடைய காரியதரிசியிடம் "என்ன தயக்கம் என்ன பேசுகிறார்கள்' என்று கேட்டிருக்கிறார். "ஒன்றுமில்லை சும்மா வேடிக்கை பார்க்கிறார்கள்' என்று கூறி சமாளித்தார் காரியதரிசி.

பின்பு காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது காரியதரிசி, இதைப் பற்றி பின்னால் நேரு கேள்விப்பட்டால் நம் மீது கோபப்படுவார் என்று கருதி சுங்க இலாகா அதிகாரிகள் தயங்கிய காரணத்தைக் கூறினார். இதைக் கேட்ட நேரு கோபப்பட்டு, "நான் தான் சந்தேகப்பட்டுக் கேட்டேனே ஏன் அப்பொழுதே என்னிடம் சொல்லவில்லை' என்று கடிந்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்ததும் பேரன்கள் இருவரும் தாத்தாவிடம் துப்பாக்கிகளை ஆவலோடு கேட்டார்கள். அதற்கு நேரு, ""துப்பாக்கி பெட்டியை யாரும் தொடக் கூ டாது. முத லில் அதற்கு சுங்கவரி கட்டிவிட்டு வரட்டும். பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டார். அதன்படி காரியதரிசி துப்பாக்கி பார்சலை எடுத்துக் கொண்டு, விமானநிலையம் சென்று சுங்கவரியை முறைப்படி செலுத்திவிட்டு ரசீதை வாங்கிக் கொண்டு வந்த பிறகுதான், பேரன்களான ராஜீவ்காந்தியும் சஞ்சய்காந்தியும் துப்பாக்கிகளை எடுத்துப் பார்த்தனர்.

பொம்மை துப்பாக்கிக்குச் சுங்கவரி கட்டுவதில் கறாராக இருந்த நேரு குடும்பத்தில் ராஜீவ் காந்தி மேல் தான் போஃபார்ஸ் ஊழல் என்ற கெட்ட பெயர் வந்தது காலம் செய்த வேடிக்கை.

ராஜீவ்காந்தி வெளிநாட்டில் படிக்கும்பொழுது அவருக்கு குறைந்த அளவு பணத்தையே இந்திராகாந்தி அனுப்புவார். கைச் செலவுக்குப் பணமே அனுப்பமாட்டாராம். இந்திரா காந்தி தன் பிள்ளைகள் எளிமையாக வளர வேண்டும் என்று எண்ணி அப்படிச் செய்திருக்கிறார்.

அதனால் ஐஸ்கிரீம் விற்பது முதல், பழம் விற்பது, ரொட்டிக் கடையில் பணியாற்றுவது என்று விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைப் பாக்கெட் மணியாக வைத்துக் கொண்டார் ராஜீவ் காந்தி. இதை அறிந்தபோது சோனியாவுக்கு ராஜீவின் மேல் இருந்த மரியாதையும், அன்பும் மேலும் ஒரு படி உயர்ந்து, அவரைத் திருமணம் முடித்தார்.

ராஜீவ் காந்தியின் படுகொலையைப் புலனாய்வு செய்த டி.ஆர்.கார்த்திகேயனும் கர்நாடக முதலமைச்சர் குண்டுராவும் ராஜீவின் படுகொலை சம்பவத்துக்கு முன் அவருடைய பயணத்தில் சில மாறுதல்கள் இருந்ததை அவரிடம் தெரிவிக்க விரும்பி அவரது அறைக்குச் சென்றார்கள். கதவைத் தட்டியதும் உள்ளே வாருங்கள் என்று ராஜீவ் குரல் கொடுத்தார், இருவரும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி, ஒரு பெரிய டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு, கட்டில் மீது அமர்ந்த படி, ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் ராஜீவ்.

"யோகா செய்து கொண்டிருக்கிறீர்களா?' என்று குண்டுராவ் கேட்க, ""இல்லை குண்டுராவ்ஜி நான் இரண்டு செட் உடைகள் தான் கொண்டு வந்திருக்கிறேன். அந்த இரண்டு செட் உடையும், பீதர் நகரிலும், குல்பர்க்கா மீட்டிங்கிலும், கசங்கி விட்டன. எனவே இரண்டு செட் உடைகளையும் துவைத்துக் காயப் போட்டிருக்கிறேன்'' என்று சகஜமான குரலில் பேசினார் ராஜீவ்.

ராஜீவ் காந்தியின் எளிமைக்கு இது சான்று. அதே போல் மனித நேயமுள்ளவர். இந்தக் குணம் அவருடைய தாத்தா ஜவகர்லால் நேருவிடம் இருந்து வந்தது. நேரு மக்களிடம் நெருங்கிப் பழகியதைப் போலவே ராஜீவும் மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார். தனக்கு யார் மாலை போட்டாலும், அதைக் கழட்டி மக்கள் கூட்டத்தின் மீது வீசுவார் நேரு. அதே போன்ற பழக்கம் ராஜீவிடம் இருந்தது.

அதனால்தான் ஸ்ரீபெரும்புதூரில் மாலை போட விரும்பிய அந்தப் பெண்ணின் மனம் புண் படக்கூடாது என்று கருதி மாலையை வாங்கினார் ராஜீவ்.

அந்த எளிமையே அவருடைய உயிரைக் குடிக்கக் காரணமாக அமைந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.