இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை: தமிழ்த் தாத்தா

தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் பண்ணியவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மனமகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 pm

ராஜேஷ்

தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் பண்ணியவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மனமகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர்கள், இலக்கிய சுவைக்காகத் தமிழை நேசித்தவர்கள்.. எனப் பல விதத்தில் தமிழைப் பயன்படுத்திய மனிதர்களைக் கண்டு கொண்டிருக்கிறது தமிழகம்.

ஆனால் கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த நூல்களைக் காப்பாற்றி நமக்கு கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சுவாமிநாத ஐயர். தமிழ் மகாத்மா, மகாவித்வான், மகாத்மா, மகாகவி என்று பெரியவர்களின் பாராட்டைப் பெற்று மகா மகோபாத்தியாயராகத் திகழ்ந்தவர் உ.வே.சா. இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள உத்தமதானபுரம்.  இவரது தந்தையார் பெயர் வேங்கட சுப்பைய்யர். தாயாரின் பெயர் சரஸ்வதி.

சாமிநாதன் 1855-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சூரியமூலை என்ற ஊரில் பிறந்தார். சுவாமிமலை முருகன் பெயரால், சாமிநாதன் என்று அழைக்கப்பட்டார்.

அந்தக் காலத்தில் திண்ணையில் மணலைப் பரப்பி, அதன் மீது எழுதிப் பழகுவார்கள். ஏடுகளில் எழுதிப் படித்த காலத்தில் அவர் வாழ்ந்தார். அதனால்தான் ஏடு எழுதுவதில் உ.வே.சா. திறமை பெற்றார்.

உடலில் குறை உடைய கோபாலகிருஷ்ண பாரதியார்தான் நந்தன் சரித்திரத்தை எழுதினார் என்பதை கேள்விப்பட்ட உ.வே.சா.வால் நம்ப முடியவில்லை. அதன் பிறகு  இனிமேல் யாரையும் எளியோராக எண்ணக் கூடாது என்ற பாடத்தைத் தெரிந்து கொண்டார். மற்றும் எல்லோரிடத்திலும் உள்ள நல்லவற்றையே காணும் குணத்தைப் பெற்றார்.

தமிழ் இலக்கியங்களுக்காக அவர் அலைந்து திரிந்துபட்ட துன்பங்கள் எல்லாம் அவருக்கு சுவடிகள் கிடைத்தவுடன் எல்லாம் தூசாகிவிட்டதை உணர்ந்தார். புகை வண்டியிலும்  கட்டை வண்டியிலும் மாட்டு வண்டியிலும் சில ஊர்களுக்கு நடந்தும் சென்றார்.

ஒரே நூலுக்குப் பல ஏடுகள் கிடைத்தன. அவற்றில் எது சரியான சுவடி, எது ஆசிரியரால் எழுதப்பட்டது, இடைச் செருகல்கள் உள்ள சுவடிகள் எவை என்று ஆராய்ந்து அதைக் கண்டுபிடித்து, பிறகு அதை ஆய்வு செய்து அதில் வேண்டிய இடங்களில் திருத்தங்களையும் செய்தார்.

உ.வே.சா.வின் திறமையைக் கண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாட்டு அறிஞர்கள் பாராட்டினர். பல நாட்டறிஞர்களும், அவரது தொண்டையும், அறிவையும் வியந்து பாராட்டினார்கள். குறிப்பாக டாக்டர் ஜி.யு.போப் மிகவும் வியந்து பாராட்டி

னார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த தமிழ் அறிஞர். அவர் உ.வே.சா.வை எல்லோருக்கும் புரியும் விதமாக இலக்கிய நூல்களுக்கு மிகவும் எளிய நடையில் உரை எழுதச் சொன்னார்.

மணிமேகலைக்கு சாமிநாதய்யர் எழுதிய உரையை அறிஞர் பலர் பாராட்டினர். உ.வே.சா பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. சங்ககாலத்து நூல்கள், 2. பிற்காலத்தைச் சேர்ந்த நூல்கள், 3. இலக்கண நூல்கள், 4. பிரபந்தங்கள்.

1906-ம் ஆண்டு சென்னை அரசு மகா மகோபாத்யாயர் என்ற பட்டத்தை அளித்தது. அத்துடன் சிறப்புச் சான்றிதழும், 1000 வெண் பொற்காசுகளையும் வழங்கி மரியாதை செய்தது.

மதுரைத் தமிழ்ச்சங்கம் 5000 வெண் பொற்காசுகளை வழங்கியது. 1932-ம் ஆண்டில் சென்னை பல்கழைக் கழகம் தமிழ் இலக்கிய அறிஞர் என்ற பட்டத்தை வழங்கியது. 1935-ஆம் ஆண்டில் உ.வே.சா.வின் 81-வது பிறந்தநாள் தமிழ் நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று பி.டி.ராஜன் பொதுமக்கள் சார்பில் 3000 ரூபாய் கொண்ட பணமுடிப்பை வழங்கினார்.

1942-இல் ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரத்தில் முதன் முதலில் ஏற்படுத்திய மீனாட்சி தமிழ் கல்லூரிக்குத் தலைவராக உ.வே.சா.வை நியமித்தார்.

1948-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியின் முன்புறத்தில்  உ.வே.சா.வின் உருவச் சிலையை வைத்தார்கள்.

மனிதனை மனிதனாகச் செய்வது நன்றி உணர்வே என்ற கொள்கை உடையவராக உ.வே.சாமிநாதய்யர் வாழ்ந்து வந்தார். சிறு சிறு உதவி செய்தவர்களையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். எனவேதான் உ.வே.சா.வின் ஆசிரியர் இறந்ததும், அவருடைய மனைவிக்கு மாதந்தோறும் பணம் அனுப்பி வந்தார். இசை ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ண பாரதியாரின் சரித்திரத்தை எழுதி, தன்னுடைய நன்றி மறவாத குணத்தை வெளிப்படுத்தினார்.

உ.வே.சா. 1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தமிழையும் நம்மையும் விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார். உ.வே.சா அவருடைய கடைசி மூச்சு வரை தமிழுக்குத் தொண்டு செய்தார்.

உ.வே.சா. நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் பதிப்பித்துத் தந்த அருந்தமிழ் நூல்கள் என்றென்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.