இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விளையாட்டு: வாலிபால் வேங்கை

விளையாட்டு மைதானத்தில் புகுந்துவிட்டால் வேங்கைக்குரிய பாய்ச்சல் என வாலிபால் விளையாட்டில் கலக்கி வருகிறார் சர்வதேச வாலிபால் வீரர் நடராஜன். விளையாட்டு குடும்பப் பின்னணியிலிருந்து வந்துள்ள நடராஜனின் சொந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 pm

வா.சங்கர்

விளையாட்டு மைதானத்தில் புகுந்துவிட்டால் வேங்கைக்குரிய பாய்ச்சல் என வாலிபால் விளையாட்டில் கலக்கி வருகிறார் சர்வதேச வாலிபால் வீரர் நடராஜன். விளையாட்டு குடும்பப் பின்னணியிலிருந்து வந்துள்ள நடராஜனின் சொந்த ஊர் காரைக்கால். 14 வயதில் துவங்கிய வாலிபால் விளையாட்டு இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

2003-ம் ஆண்டில் ஜூனியர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றதற்காக புதுச்சேரி அரசு சமீபத்தில் ரூ.5 லட்சம் வழங்கி நடராஜனை கெüரவித்திருக்கிறது.

சர்வதேச வீரராக இருந்தாலும் இன்னும் அதே அடக்கத்துடன் பல வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார் நடராஜன். அதுமட்டுமல்லாமல் புதுவையில் 2 முறை அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

வாலிபால் விளையாடும் ஆர்வம் எப்படி வந்தது?

எங்கள் குடும்பமே விளையாட்டுக் குடும்பம். அப்பா கால்பந்து வீரர். சகோதரர்கள் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து எனப் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வந்தனர். எனது மாமாக்கள் கூட விளையாட்டு வீரர்கள்தான். அவர்களைப் பார்த்துதான் எனக்கும் வாலிபால் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர்களிடமே பயிற்சியும் பெற்றேன். பின்னர் பள்ளியில் நடந்த போட்டிகளில் பங்கேற்று எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்.

எந்த வயதில் வாலிபால் விளையாடத் துவங்கினீர்கள்?

14 வயதில் வாலிபால் விளையாடத் துவங்கினேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சியிலுள்ள கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதுதான் பயிற்சியாளர் கலைச்செல்வன் எனக்கு அறிமுகமானார். அவரிடம்தான் ஏராளமான டெக்னிக்குகளைக் கற்றுக் கொண்டேன்.

பள்ளி அளவிலேயே தேசிய பள்ளி வாலிபால் போட்டி, தேசிய இளைஞர் வாலிபால் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினேன். எனது திறமைகளை மேலும் வளர்க்க பயிற்சியாளர்கள் பாஸ்கர், காசிநாத் ஆகியோர் மிகவும் உதவினர். திருச்சியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து முடித்த பின்னர் தமிழக அணிக்காக விளையாடத் துவங்கினேன்.

பின்னர் மெல்ல மெல்ல முன்னேறி இந்திய அணியில் இடம்பிடித்தேன்.

இந்திய அணிக்காக விளையாடியது எப்போது?

2001-ம் ஆண்டில் இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடத் துவங்கினேன். ஒவ்வொரு இந்திய வாலிபால் வீரருக்கும் உள்ள கனவு அதுதான். தாய்நாட்டுக்காக விளையாடுவேன் என்ற என்னுடைய சிறிய வயது கனவு அன்று நனவானது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 15-க்கும் மேற்பட்ட சர்வதேச வாலிபால் போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக பல வெற்றிகளைக் கொண்டு வந்தோம்.

நீங்கள் பெற்ற வெற்றிகள்...?

தேசிய பள்ளிகள் வாலிபால் விளையாட்டில் சாம்பியன் பட்டம், தேசிய இளைஞர் வாலிபால் போட்டியில் முதலிடம், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 முறை (2004, 2006) தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன்.

2002-ம் ஆண்டில் ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டப் போட்டியில் இரானில் விளையாடினோம். இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தேசிய சீனியர் போட்டியில் 4-ம் இடம், ஆசிய ஜூனியர் போட்டியில் 4-ம் இடத்தைக் கைப்பற்றினோம்.

தற்போது எந்த அணிக்காக விளையாடி வருகிறீர்கள்...?

என்னுடைய ஆட்டத்தைப் பார்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எனக்கு வேலை கிடைத்தது. தற்போதும் ஐஓபி அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறேன். ஐஓபி அணிக்காக கேப்டன் பதவியிலும் இருந்துள்ளேன். என்னுடைய தலைமையில் ஐஓபி அணி ஏராளமான வெற்றிகளைக் குவித்துள்ளது.

தற்போது ஐஓபி கீழ்பாக்கம் கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். நான் ஒவ்வொரு முறை வெற்றியைப் பெறும்போது வங்கி அதிகாரிகள் எனக்கு வாழ்த்து தெரிவிப்பர். அது எனக்கு மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்கும் டானிக்காக இருக்கிறது.

வீரர்கள் வெற்றியைப் பெறுவதற்கு அவர்களது குடும்பத்தாரும் முக்கியம். அவர்களுடைய உதவி இல்லாமல் வெற்றியைப் பெற முடியாது. எனது மனைவி காயத்ரி எனது வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

நீங்கள் பெற்ற வெற்றிகளில் முக்கியமானது...?

2004-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. அதுதான் நாங்கள் பெற்ற வெற்றிகளிலேயே முக்கியமானது மற்றும் மறக்க முடியாததும் கூட. தங்கம் வென்று இந்திய அணிக்கு பதக்கம் அளிக்க அழைத்தபோது இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றது மறக்க முடியாது.

தற்போது வாலிபால் விளையாட்டு தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது...?

தமிழகத்தில் வாலிபால் விளையாட்டுக்கு அதிக மவுசு இருக்கிறது. நாள்தோறும் ஏராளமான வீரர்கள் உருவாகி வருகின்றனர். வாலிபால் சம்மேளன நிர்வாகி முருகன் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு உதவி வருகிறார். தேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சிறப்பாக வீரர்களைத் தயார் செய்து அனுப்பி வருகிறார். இதனால் இந்திய அணிக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து வருகிறது.

வாலிபால் விளையாட்டுக்கு மவுசு குறைந்து வருகிறதா...?

நிச்சயமாக இல்லை. மார்ச் மாதத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது புதுச்சேரியில் அகில இந்திய வாலிபால் போட்டியை நடத்தினோம். ஒவ்வொரு நாளிலும் சுமார் 5 ஆயிரம் ரசிகர்கள் போட்டிகளைக் காண வந்திருந்தனர். இதிலிருந்தே வாலிபாலுக்கு மவுசு குறையவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.

புதுச்சேரி அரசின் கெüரவம்...?

2002-ம் ஆண்டில் ஆசிய வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக புதுச்சேரி அரசு தற்போது ரூ.5 லட்சம் வழங்கி கெüரவித்திருக்கிறது. இதைப் போல சிறப்பாக பிரகாசிக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அரசு உதவ வேண்டும்.

எதிர்காலத் திட்டம்...?

காரைக்காலில் நெடுங்காடு ஸ்போர்ட்ஸ் கிளப்பை துவங்கியிருக்கிறேன். எதிர்காலத்தில் திறமையான வாலிபால் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.