முரண்சுவை-8: காந்தியின் ஆயுதம்!
ஒரு சமயம் மகாத்மா காந்திஜி தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் முதல் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார். வெள்ளையர் ஒருவருக்காக காந்திஜியை, ஒரு வெள்ளையன் புகை வண்டியிலிருந்து வெளியே தள்ளின


ஒரு சமயம் மகாத்மா காந்திஜி தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் முதல் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார். வெள்ளையர் ஒருவருக்காக காந்திஜியை, ஒரு வெள்ளையன் புகை வண்டியிலிருந்து வெளியே தள்ளினான். காந்திஜி பெட்டி படுக்கையுடன் பரிதாபமாகக் கீழே விழுந்தார்.
ரயிலில் இருந்து வெளியே தள்ளியவருக்குத் தெரியாது.. நாளை இந்தியாவைவிட்டே நம்மை விரட்டப் போகிறவர் இந்த ஒல்லியான மனிதர்தான் என்று.
தென்னாப்பிரிக்க சம்பவம்தான் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய திருப்பம்.
பிரிட்டிஷ்காரர்களுக்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பதற்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பல வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்பதாலும் கல்வியைக் கற்பித்தனர். அதன் காரணமாக ஆங்கில மொழியும், ஆங்கில கலாசாரமும் நம்முடைய மூளைக்குள் புகுந்தன. ஆங்கிலம் தெரிந்தால் அவன் படித்தவன், எல்லாம் தெரிந்தவன் என்ற ஒரு மாயையை உருவாக்கினார்கள்.
ஆங்கிலம் அரசாங்க மொழியாகிவிட்டது. இந்தியா முழுக்க ஆங்கிலத்தைப் பரப்பினார்கள். அதுதான் நம்மை இணைக்கவும் பயன்பட்டது.
லண்டனில் நம்முடைய நாட்டைச் சேர்ந்த பலர் சட்டம் பயின்றார்கள். காந்தியும் ஆங்கில வழி கல்வி கற்று, ஆங்கில நாட்டில் சட்டம் படிக்கச் சென்றார். அந்த ஆங்கிலத்தின் மூலமே அவர் உலக அரசியலையும், உலக சரித்திரத்தையும், பல நாடுகளில் நடந்த புரட்சிகளையும் தெரிந்து கொண்டார். அதையெல்லாம் படித்த காந்திஜி, நேரு, அம்பேத்கர், வ.வே.சு. ஐயர்., போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.
500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்தன. 20 தேசிய இனங்களும், பல மதங்களும் இந்தியாவில் இருந்தன. இந்தியா ஒரு நாடு அல்ல. இது ஒரு உபகண்டம். பிரிட்டிஷ்காரன் தன்னுடைய வசதிக்காக, சுயநலத்துக்காக, ஆட்சி செய்வதற்கு எளிதாக இருக்க இந்தியாவை ஒன்றாக்கினான். அதன் பயன் நமக்கு இந்தியா என்ற ஒரு நாடு உருவாகியது. தமக்கு எதிரியாக ஒரு பெரிய நாட்டை அவனே உருவாக்கினான்.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட காந்திஜி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அன்னியனோ, மற்ற மதத்தைச் சேர்ந்தவனோ அல்ல. காந்திஜி எந்த மதத்தைச் சேர்ந்தவரோ அந்த மதத்தைச் சேர்ந்தவன்தான் கொன்றான்.
காந்திஜி இறந்தவுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ச்சில் கூறியது நாங்கள் இத்தனை வருடங்களாக காந்திஜியைப் பத்திரமாக கவனித்திருந்தோம். சுதந்திரம் கிடைத்து ஒரு வருடத்திற்குள் கொன்று விட்டீர்களே என்றார்.
பிரிட்டிஷ்காரனின் மதம் கிறிஸ்தவமதம். அம்மதக் கொள்கையான சாத்வீக முறையைக் கடைப்பிடித்து வெள்ளையனை வெளியேற்றினார் காந்திஜி.
உலகத்துக்கே அகிம்சையை போதித்து,அன்பு எனும் ஆயுதத்தின் மூலம் போரிலிருந்து காப்பாற்றியவர், துப்பாக்கி குண்டுக்குப் பலியானார்.
எந்த காந்தியை பலாத்காரமாக
ரயில் வண்டியிலிருந்து வெளியே தள்ளினார்களோ, அவர்களை சாத்வீகமாக காந்திஜி வெளியேற வைத்துவிட்டார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...