இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை-16: 52 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் போதும்!

கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்பதன் சுருக்கமே ஜி.டி.நாயுடு என்பதாகும். கோயம்புத்தூர் இன்று விஞ்ஞானத் துறையிலும் நூற்பாலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு மூல காரணம் ஜி.டி.நாயுடுதான். கோயம்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:03 pm

ராஜேஷ்

கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்பதன் சுருக்கமே ஜி.டி.நாயுடு என்பதாகும். கோயம்புத்தூர் இன்று விஞ்ஞானத் துறையிலும் நூற்பாலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு மூல

காரணம் ஜி.டி.நாயுடுதான்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கலங்கல் என்ற கிராமம்தான் இவரது பிறந்த ஊர். இவர் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1893-ம் ஆண்டு, மார்ச் மாதம் 23-ம் தேதி தான் ஜி.டி.நாயுடு பிறந்தார். பிறந்த ஒரு வருடத்திற்குள் தன்னுடைய தாயை இழந்தார். எனவே இவருடைய தாய்மாமன் வீட்டில்தான் வளர்ந்தார். இவருக்கு 19 வயதில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் செல்லம்மா. இவரை விட 3 வயது மூத்தவர்.

இந்த மேதை முறைப்படி உயர் கல்வி கற்கவில்லை. இவருக்கு இயற்கையாக அமைந்தது நுண்ணறிவு.

1920-ஆம் ஆண்டிலேயே போக்குவரத்துக்காகப் பேருந்துகள் இயக்கி நல்ல லாபம் பெற்றார். நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்தார். ஆகவே அந்தக் காலத்தில் மோட்டர் மன்னன் என்று பெயரெடுத்தார்.

1935-ம் ஆண்டில் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டவர். லண்டன் சென்ற சமயம் இங்கிலாந்து நாட்டில் மன்னராக இருந்து வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலமானார். அவருடைய மரண ஊர்வலத்தை மிக அற்புதமாகப் படமாக்கினார்.

1936}ஆம் ஆண்டு ஜெர்மனியில் கோலன் நகரிலுள்ள டோம் என்ற ஓட்டலில் தங்கியிருந்தார். அந்த ஓட்டலுக்கு ஹிட்லர் தற்செயலாக வந்தார். நாயுடு நேராக ஹிட்லரிடம் சென்று தன்னை இன்னார் என்று அறிமுகம் செய்து கொண்டு ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பிறகு, புகைப்படத்தில் ஹிட்லரின் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டார்.

இவர் தயாரித்த பிளேடு கொண்டு 200 முறைகளுக்கு மேல் முகம் மழிக்கலாம். இந்த பிளேடு லண்டனில் நடந்த விற்பனைப் போட்டியில் ஒரே நாளில் 7500 விற்று சாதனை படைத்தது. இவர் தயாரித்த ரேசண்டு பிளேடின் உரிமையை அமெரிக்காவில் பலர் கேட்டார்கள் நாயுடு கொடுக்கவில்லை.

ஜெர்மனியில் லீப்சிக் என்னும் நகரத்தில் 1936-ம் ஆண்டில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவர் தயாரித்த சவரக்கத்தி முதற் பரிசையும் பிளேடு இரண்டாவது பரிசையும் பெற்றுப் பாராட்டுதல்களையும் பெற்றன.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்வதை விரும்பமாட்டார். 1944-இல் இவருடைய மகள் சரோஜினி தேவியின் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். இவர் 7 முறை உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தந்தைப் பெரியாருடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார்.

மாணவர்களின் முதல் எதிரி பெற்றோர். இரண்டாவது எதிரி அரசியல். மூன்றாவது எதிரி சினிமா என்பார். இருபத்தைந்து வயது வரை படிக்க வேண்டும், ஐம்பது வயது வரை சம்பாதிக்க வேண்டும், ஐம்பது வயதிற்கு மேல் சம்பாதித்ததைச் செலவு செய்ய வேண்டும் என்பார்.

மாணவர்களுக்குத் தரப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்று சொன்னார். ஒரு வருடத்திலுள்ள 52 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் போதும் என்றார்.

ஒரு மோட்டார் சைக்கிள் மீது வெறித்தனமான மோகம் கொண்டு, அதை விலைக்கு வாங்குவதற்காக மூன்றாண்டுகள் ஓர் ஓட்டலில் சர்வராக உழைத்தார். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழி அவருக்கு சுத்தமாகத் தெரியாது.

1964 மார்ச் மாதம், 63 தொழில் நிறுவனங்கள் இவரிடம் இருந்தன. பழைய இரும்பைக் குறைந்த விலைக்கு வாங்கி, தம்முடைய மாணவர்களைக் கொண்டு 32 பஸ்களைத் தயார் செய்து, பல பள்ளிக் கூடங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதற்கு வருமானவரி போட்டார்கள்.

கடைசியாக வருமான வரித்துறையினர் நாயுடுவின் சொத்துகளை ஜப்தி செய்யும் நிலை உருவானபோது, தன் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் மனைவியின் பெயருக்கு மாற்றி எழுதினார். சட்டப்படி மனைவி என்ற உரிமை இருந்தால்தானே சொத்துகள் பறிக்கப்படும். இதிலிருந்து தப்பிப்பதற்காக மனைவியை இவர் விவாகரத்து செய்தார்.

முதல் மனைவியினுடைய அனுமதியின் பேரில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரது பெயர் ரங்கநாயகி. இரண்டாவது மனைவிக்கு ஒரே மகன். அவர் பெயர் கோபால்.

அவர் ஒரு நாய் வளர்த்தார். அதனுடைய பெயர் போஸ். அந்த நாயை தன்னுடைய கம்பெனியின் பங்குதாரர் ஆக்கினார். போஸ் என்பவர் மைனர் என்று காட்டி எல்லா ஆவணங்களிலும் தானே கையெழுத்துப் போட்டார். அதற்கு வருமான வரியை ஒழுங்காகக் கட்டி வருமானத்துறையினர் மீது தனக்கிருந்த வெறுப்பைக் காட்டினார்.

இந்திய அரசியலில் காந்தி புகழ் பெறுவதற்கு முன்பாகவே நாயுடு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார். பின்பு நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.

ஜி.டி.நாயுடு பழுத்த நாத்திகர். பெரியார் நாத்திகர் ஆவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் நாத்திகன், பகுத்தறிவுவாதி என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

தன்னுடைய நோக்கமும், இலட்சியமும் சரிவர நிறைவேறாததால், கடைசிக் காலத்தில் மனம் நொந்து படுக்கையில் விழுந்தார். தாங்க முடியாத மனத்துயரங்களுடன் தன் கடைசி நாட்களைக் கழித்து வந்த விஞ்ஞான அறிவுலக மேதை, 1974 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 4-ம் தேதி மறைந்து விட்டார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.