இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை-42: மகரிஷி

இந்தியர்களின் உயிர்மூச்சு ஆன்மிகம் என்பார் விவேகானந்தர். ஆனால் மேலை நாட்டுக்காரர்களுக்கு விஞ்ஞானம்தான் உயிர்மூச்சு. ஏனெனில் அவர்களின் வாழ்நிலைக்கானத் தேவைகள் அதிகம், எனவே அவர்கள் அறிவை உபயோகித்து விஞ்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:17 pm

ராஜேஷ்

இந்தியர்களின் உயிர்மூச்சு ஆன்மிகம் என்பார் விவேகானந்தர். ஆனால் மேலை நாட்டுக்காரர்களுக்கு விஞ்ஞானம்தான் உயிர்மூச்சு. ஏனெனில் அவர்களின் வாழ்நிலைக்கானத் தேவைகள் அதிகம், எனவே அவர்கள் அறிவை உபயோகித்து விஞ்ஞானத்தை வளர்த்தார்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தார்கள். ஆகையால்தான் அவர்களுடைய வளர்ச்சி விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஆனால் நம்முடைய சீதோஷ்ண நிலைக்குத் தேவைகள் மிகவும் குறைவு. அதனால் நம்முடைய சிந்தனைகள் எல்லாம் ஆன்மிகத்தில் வளர்ந்தது. அதன் மூலம்தான் நாம் இந்தப் பிரபஞ்சத்தை அறிந்தோம். கணிதம், மருத்துவம், வானசாஸ்திரம் போன்றவற்றிலும் அதிக அளவில் வளர்ந்துள்ளோம்.

இந்த நாட்டில் உண்மையான ஞானிகள் பலர் தோன்றி இந்தியத்திரு நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். அந்த ஞானிகளின் வரிசையில் வந்தவர்தான் ஸ்ரீ ரமண மகரிஷி. இவர் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சுந்தரமைய்யர் என்பவருக்கும் அழகம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக திருவாதிரையும் புனர்பூசமும் சந்திக்கும் நேரத்தில் இரவு 1 மணிக்கு அவதரித்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் வேங்கடராமன்.  மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள, பாடல் பெற்ற தலமாகிய திருச்சுழிதான் ரமணர் அவதரித்த ஊர். திருச்சுழி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் படித்து வந்தார் ரமணர். தனது தந்தை சுந்தரமைய்யர் மறைந்தவுடன் ரமணர் மதுரையில் அவருடைய சிறிய தந்தை சுப்பையா இல்லத்தில் தம் படிப்பைத் தொடர்ந்தார். மதுரையில் உள்ள ஸ்காட்டிபுல் பள்ளியிலும் மிஷின் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். ரமணரின் இளமைக்காலம் மற்ற சிறுவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தது. பிற்காலத்தில் உலகம் போற்றும் ஞானியாக விளங்கப் போவதற்குரிய எந்தவித அறிகுறியும் அப்பொழுது தெரியவில்லை.

படிப்பில் சராசரி மாணவனாக இருந்தார், விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. அவர் எதைத் தொட்டாலும் துலங்கியது. எனவே எல்லோரும் எந்தக்காரியத்தைத் தொடங்கினாலும் இவரைத் தொடங்கிவைக்கச் சொல்லுவார்கள். இதனால் அவரை தங்கக்கையோன் என்று புகழ்ந்தார்கள்.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அருணாசலம் என்ற திருவண்ணாமலையைப் பற்றி கேள்விப்பட்டு தானும் அங்கேயே சென்று துறவியாகிவிட வேண்டுமென்று தீர்மானித்தார். பள்ளியில் அண்ணன் கொடுத்த ஐந்து ரூபாயில் மூன்று ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி இரண்டு ரூபாயையும், தன்னைத் தேட வேண்டாம் என எழுதிய ஒரு கடிதத்தையும் வீட்டில் வைத்து விட்டு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டார். வழியில் பல துன்பங்களை அடைந்த ரமணர் தனது கடுக்கனை நான்கு ரூபாய்க்கு அடகுவைத்தார், அந்தப் பணத்தில் திருவண்ணாமலைக்கு டிக்கெட் வாங்கி ரயிலில் சென்றார்.

கோவணத்தைத் தவிர வேறொன்றையும் அணிந்து கொள்ளாத பாலயோகி ரமணர் தரையிலும் கொதிக்கும் பாறையிலும் படுத்துக் கிடப்பார். அவரைத் தேடி வந்த அவருடைய தாயாரும் உடலில் துணியில்லாமல் அதுவும் கோவணத்துடன் பாறை மீது வெயிலில் ரமணர் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தாயார் தன்னோடு வந்துவிடும்படி அழைத்தபோது தான் வருவதற்கில்லை என்று ரமணர் சொல்லிவிட்டார். சிலகாலத்திற்குப் பிறகு அவரது தாயாரும் மகனுடனே தங்கி துறவு பூண்டார். பல காலம் குகைகளில் தங்கி தவம் செய்து கொண்டிருந்த ரமணர் தன் தாயின் மரணத்திற்குப் பிறகு அவரது சமாதியருகிலேயே தங்கி விட்டார்.

அவர் ஆண்டியாக வாழ்ந்தார். ஆனால் அரசர்களும் அவரைப் பணிவதிலே பெருமை கொண்டனர். மனிதர்கள் மீது மட்டுமல்ல, அனைத்து உயிர்கள்மீதும் அவரது அன்பு பரந்து விரிந்தது. அவர் பறவைகள் மிருகங்கள் ஆகியவற்றோடும் வெகு சகஜமாகப் பழகினார். அவையும் அவர் பேசுவதை மனிதர்களைப் போன்று புரிந்து கொண்டன. பழைய காலத்தில் ரிஷிகள் இவ்வாறு மற்ற உயிரினங்களுடன் பேசுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒருமுறை தமிழகத்திற்கு வருகை தந்த மொரார்ஜி தேசாய் பல ஆன்மிக தலங்களுக்குச் சென்று விட்டு திருவண்ணாமலையிலிருக்கும் ரமணர் ஆசிரமத்திற்கும் சென்றார். ரமணரின் முன்பு ஒருமணி நேரத்திற்குமேலாக உட்காந்திருந்த போதிலும் ரமணர் இவரிடம் எதுவும் பேசவில்லை. எளிதில் கோபப்பட்டு வெளிப்படையாக கருத்து சொல்லிவிடுபவர் தேசாய். ஆனால் அன்று எதுவும் பேசாமல் அமர்ந்திருந்துவிட்டு சென்றுவிட்டார். தேசாய் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் ரமணமகரிஷியைப்பற்றி சிறப்பாக எழுதி உள்ளார்.

ரமணர் மிகச் சிறந்த கல்விமான். அழகுத்தமிழில் நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறார். சந்தேகங்களை பக்தர்கள் கேட்டால் பதில் பொதுவாக மௌனமாகவே இருந்ததுதான். உண்மையில் அவரது மோன முழக்கம் உலகெங்கும் ஓங்கி ஒலித்தது. கடைசியாக 14.4.1950-ஆம் அன்று புற்று நோயின் காரணமாகக் காலமானார். ஆனால் அவருடைய பக்தர்கள் ரமணர் நரவேடத்தைக் களைந்தார் என்றனர். அவர் விட்டுச் சென்ற அவரது அருட்பணியை ஆசிரமத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மெüன குருவைப் பற்றி இன்று உலகே பேசுவது முரண்சுவை அல்லவா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.