இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை -39: நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகன்!

பெரோஸ் காந்தியின் தந்தை பெயர் ஜெஹங்கீர் காந்தி, தாயாரின் பெயர் ரத்தினமாய். இவர்கள் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 1912 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பம்பாய் கோட்டை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:50 pm

ராஜேஷ்

பெ ரோஸ் காந்தியின் தந்தை பெயர் ஜெஹங்கீர் காந்தி, தாயாரின் பெயர் ரத்தினமாய். இவர்கள் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 1912 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பம்பாய் கோட்டைப் பகுதியில் உள்ள நாரிமன் மருத்துவமனையில் பிறந்தார் பெரோஸ். இவர்களது குடும்பம் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தது.

 இந்திராவோ அலகாபாத்தில் அரண்மனை போன்ற பங்களாவில் வாழ்ந்தவர். தங்களது வீட்டில் உள்ள வெளிநாட்டுக் காருக்கு வெள்ளைக்கார டிரைவரை வேலையில் அமர்த்திய முதல் இந்தியர்கள் நேரு குடும்பத்தினர். கமலா நேருவின் அறிமுகத்தினால் பெரோஸ் காந்தி ஆனந்த பவனில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். கமலா நேருவைத் தன் தாய் போல் பாவித்து அன்பு செலுத்தி வந்தார்.

 பெரோஸ்-இந்திரா திருமணம் 1942-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 -ம் தேதி அலகாபாத்தில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்த பவனில் நடைபெற்றது. இது ஒரு எளிய திருமணம் என்றுதான் கூற வேண்டும். மிக முக்கியமானவர்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. முக்கியமாக மகாத்மா காந்தி கூட கலந்து கொள்ளவில்லை.

 பெரோஸýம் இந்திராவும் திருமணம் முடிந்தவுடன் போர்ட் ரோட்டில் உள்ள சிறிய வீட்டில் குடியேறினார்கள். பெரோஸ் காந்தி பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்பி, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தினார். பெரோஸ் ஆங்கில அரசை நிலைகுலையச் செய்வதில் பெரும் பங்காற்றி வந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தந்தி சேவையைத் துண்டிக்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்திரா மீது தடியடி பிரயோகம் நடந்தது. 243 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார். பெரோஸ் காந்திக்கு 1 வருட தண்டனை. கணவன் மனைவி இருவரையும் ஒரே சிறையில் அடைத்திருந்தனர். ஆனால் சிறை விதிகள் அவர்கள் இருவரையும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் சந்தித்துக் கொள்ள அனுமதித்தது. வாரம் ஒரு முறை கடிதம் எழுதிக் கொள்ளலாம். ஆனால் கடிதங்கள் கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே கொடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட கடிதத்தில் 90 சதவீதம் அழிக்கப்பட்டு விடும். திருமணம் ஆகி ஆறுமாதத்திற்குள்ளாக தம்பதிகள் சிறை செல்ல நேரிட்டது.

 ஒரு சமயத்தில் பெரோஸ் அன்பு, அரவணைப்பு, ஆறுதல், போன்றவற்றை இந்திராவிடம் மேலும் தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு வந்தார். ஏற்கனவே பெரோஸ் புகை, மது பழக்கங்கள் உள்ளவர் தான். ஆனால் அந்தப் பழக்கங்கள் இப்பொழுது கட்டுக்கு மீறியது. இந்திராவோ தன்னுடைய எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவாகரத்து செய்வதை விரும்பவில்லை.

 தனது மருமகன் பெரோஸ்காந்திக்கு ஒரு நிரந்தர வேலை இருந்தால் நல்லது என்று விரும்பினார் பிரதமர் பண்டித நேரு. அவரது மனநிலையைப் புரிந்து கொண்ட இந்திரா, அப்பாவின் எண்ணத்தைத் தங்களது குடும்ப நண்பரான ராமநாத் கோயங்காவிடம் தெரிவித்தார். பெரோஸ் ஏற்கெனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தவர்தான். ராம்நாத் கோயங்காவின் அழைப்பை ஏற்று இந்தியன் எக்ஸ்பிரஸின் இணையாசிரியரானார் பெரோஸ் காந்தி.

 வேடிக்கை என்னவென்றால், மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும் இந்தியன் எக்ஸ்பிரசின் இணையாசிரியராகப் பணியாற்றியவர் என்பதுதான். பெரோஸ் காந்தியின் இறுதிக் காலம் வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் என்பதால் இந்திரா காந்தி ராமநாத் கோயங்காவை "சாசா' (மாமா) என்றுதான் அழைப்பது வழக்கம்.

 பெரோஸ் 1952 ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் கிடைத்த பிறகு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதை முழுமனதாகப் பெரோஸ் வரவேற்றார். பெரோஸின் நாடாளுமன்ற பேச்சு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது செல்வாக்கை உயர்த்தியது. வலுவான ஆதாரங்களுடன் டி.டி.கே போன்றவர்களை கதிகலங்க வைத்துவிட்டார். ஜவாகர்லால் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் டி.டி.கே. நேருவுக்கு வளைந்து கொடுக்காத பெரோஸின் தன்மை, நேருவை அவருடைய நிரந்தரப் பகைவராக்கியது. பெரோஸ் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் அடிமேல் அடி கொடுத்துக் கொண்டு இருந்தார்.

 ஒரு நாள் மார்பு வலியின் காரணமாக பெரோஸ் நினைவு இழந்துவிட்டார். அதற்கு முன்பு "இந்து எங்கே?' என்று புலம்பிக் கொண்டே இருந்தார். பெரோஸ் திடீரென்று கண் விழித்துப் பார்த்தார். சோகமே உருவாகத் தன் அருகில் உட்கார்ந்து இருந்த இந்திராவைப் பார்த்ததும் எப்போது வந்தாய்? ஏன் இவ்வளவு கவலையாக உள்ளாய்? என்றெல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் மயக்கமடைந்தார். அதன் பிறகு நினைவு திரும்பவேயில்லை. இறக்கப்போவதற்கு முன்பு இனிய நினைவுகள் தான் வரும். எனவேதான் ""பகைமையை மறந்து ஏன் கவலையாக உள்ளாய்?'' என்று அன்பு உருகக் கேட்டார். அவர் அரசியலில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது காலமானார். 47 வயது பூர்த்தியாவதற்குள் இறந்தார்.

 பெரோஸ் உடலைச் சுத்தம் செய்யும் பொறுப்பை இந்திராவே செய்தார். துணைக்கு யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. இறுதி ஊர்வலம் 2 கி.மீ சென்றது. வழி நெடுகிலும் கட்டுக்கடங்காத கூட்டம். பெரோஸýக்கு இவ்வளவு செல்வாக்கா என்று நேரு வியந்தார்.

 மோதிலால் நேரு, ஜவாகர்லால் நேரு, இந்திராகாந்தி வாழ்ந்த இடத்திற்கு எல்லோரும் அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் ஒருவர் கூட பெரோஸ் காந்தியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவதில்லை. யாரும் கேட்பாரின்றி அந்த நினைவிடம் இருக்கிறது. எல்லாவற்றையும் மறந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று முடிவெடுக்கும்பொழுது, பெரோஸ் காலமானார். வாழும்போது எப்படியிருந்தார் என்பதைவிட சாகும்போது ஒரு மனிதர் என்னவாக இருந்தார் என்பது முக்கியம்தான் போலும். (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.