புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பேல் பூரி

கண்டது (வங்கிச் சுவர் ஒன்றில் கிறுக்கல்) பணம் ட்யூப்பில் இருக்கும் பேஸ்ட் போன்றது. நசுக்கி எடுத்துவிட்டால் மீண்டும் ட்யூப்பினுள் செலுத்த முடியாது டி.ஜெய்சிங், கோயம்புத்தூர். பரிசு ரூ.100 (கோபிசெட்டிபா

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

கண்டது

(வங்கிச் சுவர் ஒன்றில் கிறுக்கல்)

பணம் ட்யூப்பில் இருக்கும் பேஸ்ட் போன்றது.

நசுக்கி எடுத்துவிட்டால் மீண்டும் ட்யூப்பினுள் செலுத்த முடியாது

டி.ஜெய்சிங்,

கோயம்புத்தூர்.

பரிசு ரூ.100

(கோபிசெட்டிபாளையம்  ஆட்டோவின் பின்புறத்தில்)

தயங்குகிறவர்களுக்கும் பயப்படுகிறவர்களுக்கும்

இந்த உலகில் எதுவுமே சாத்தியமில்லை.

ஏ.எஸ்.யோகானந்தம், ஒüவையார்பாளையம்.

(வேலூரில் உள்ள ஒரு தேநீர் கடையின் பெயர்)

ஹீரோ டீக்கடைவெ.ராம்குமார், வேலூர்.

(கம்மனஹள்ளி முதன்மைச் சாலையில் உள்ள

மரக்கடை சுவரில்)

Every piece is a Masterpiece.

கே.ஏ.நமசிவாயம்,பெங்களூரு.

(பந்தநல்லூரில் உள்ள ஓர் அச்சகத்தின் பெயர்ப் பலகையில்)

அட, நம்ம ஆண்டவர் பிரஸ்

வீர.செல்வம், காகிதப்பட்டறை.

கேட்டது

(பெண்கள் கல்லூரி அருகில் இருவர்)

""மனசுக்குப் பிடிக்கலேன்னா... அவ சானியாமிர்சா போல இருந்தாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது''

""மனசுக்குப் பிடிச்சிருந்தால்?''

""அவ சாணி அள்ளுற பெண்ணா இருந்தாலும் விடக்கூடாது''

வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

(திருச்சி "சோனா-மீனா'

தியேட்டரில் இரு இளைஞர்கள்)

""டேய், நம்ம ரமேஷையும் அவன் ஒய்ஃபையும் பார்த்தியா? மேட் ஃபார் ஈச் அதர்''னு அவங்களைத்தான் சொல்லணும்.

""அட... இவன் வேற... நம்ம ஜோடியெல்லாம் என்ன? "பள்ளம் ஃபார் ஈச் அதர்'ரா?''

சம்பத் குமாரி,

பொன்மலை, திருச்சி.

(நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் செல்போனில் ஒருவர்)

அத்தனை பேரும் தேர்தல்ல போட்டி போட்டா ஓட்டுக் கேட்டு எங்கடா போறது?''

சோ.ராமு, செம்பட்டி.

(சென்னை மயிலாப்பூர் குளக்கரை பஸ் நிறுத்தத்தில்

இரு பெண்கள்)

""ஒரு விஷயத்தில்தான் மாமி எனக்கும் அவருக்கும் ஒத்துப் போகிறது''

""என்னடி விஷயம் அது?''

""நான் செலவு பண்ணினால் அவருக்குப் பிடிக்கலை. அவர் செலவு பண்ணினால் எனக்குப் பிடிக்கலை''

நெ.இராமன், சென்னை-74.

(சத்தியமங்கலம் கடைவீதியில்)

சமையல்காரர்: என்னோட செல், சாம்பார் வாளியில் விழுந்துடுச்சு...

நண்பர்: அடடே... கொதிக்கிற சாம்பாரிலா... செல் அவ்வளவுதானா?

சமையல்காரர்: காலி சாம்பார் வாளியில்தான் விழுந்துச்சு... உழைச்ச காசு.. அதனால தப்பிடுச்சு.

ஏ.ஜே.தில்ஷாத்பேகம், சத்தியமங்கலம்.

மைக்ரோ கதை

( திருமண மண்டபத்தில்)

""செருப்பை எங்கே போடணும்?''

""இது கூடவா தெரியாது? கால்..ல...தான் போடணும்''

இனாம் கேசவன், கோவில்பட்டி.

பெரிய பணக்காரர் ஒருவர் தன் மகளை தன் நெருங்கிய நண்பரின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். மருமகனோ தன்னுடைய மனைவியை எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டிருந்தான். அடங்காப் பிடாரி, எதிர்த்துப் பேசுவாள், உபசரிக்கத் தெரியாதவள், சிடுமூஞ்சி... இப்படி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால் உண்மையில் தனது பெண் அப்படிப்பட்டவளில்லை என்று பணக்காரருக்குத் தெரியும்.

மருமகன் தனது மகளைப் பற்றிக் குறை சொல்வதை நிறுத்த என்ன செய்யலாம் என்று பணக்காரர் யோசித்தார்.

ஒருநாள் மருமகன் வழக்கம்போல தனது மனைவியைப் பற்றி மாமனாரிடம் குறை சொன்னான். அதற்கு பணக்கார மாமனார் சொன்னார்:

""நீங்க சொல்றதெல்லாம் உண்மை மாப்பிள்ளை. அவள் இனியும் திருந்தவில்லை என்றால் அவளுக்கு எனது சொத்தில் ஒரு பைசா கூடக் கொடுக்கப் போவதில்லை. இதை அவளிடமே சொல்லப் போகிறேன்''

மருமகன் அன்றிலிருந்து தனது மனைவியைக் குறை சொல்வதை முற்றிலும் நிறுத்தி விட்டான்.

க.பரமசிவன், மதுரை.

அந்த உயிரியல் பேராசிரியருக்கு ஒரு மகள். மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்.

தான் தீட்டிய ஓவியத்துடன் தந்தையின் ஆய்வு அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

""அப்பா... நான் என்ன வரைஞ்சிருக்கேன்? சொல்லுங்க பார்க்கலாம்''

""இரண்டு பாம்பும் ஒரு பல்லியும்'' என்றார் அந்த உயிரியல் பேராசிரியர்.

""கொஞ்சம் நல்லாப் பாருங்கப்பா...'' என்றாள் மகள் அழாத குறையாக.

""சனியனே வெளியே போ'' என்று கதவைத் திறந்து அவளை வெளியே தள்ளிவிட்டு தனது ஆய்வில் மூழ்கினார் பேராசிரியர்.

அழகிய இயற்கைக் காட்சி ஓவியத்தை வரைந்து கையில் வைத்திருந்த அந்தச் சிறுமி நினைத்துக் கொண்டாள்:

"நான் ஒரு பாம்பாகப் பிறந்திருந்தால் அப்பா என்னை நன்றாகக் கவனித்திருப்பார்'

செ.சத்தியசீலன், கிழவன்ஏரி.

குறுஞ்செய்தி "நறுக்'

Dr.மானிட்டர் அல்சர் ஸ்பெஷலிஸ்ட்

Dr.வில்ஸ் - லங்ஸ் ஸ்பெஷலிஸ்ட்  

Dr. மாணிக்சந்த் - மெüத் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்

Dr..பீர் - தொப்பை ஸ்பெஷலிஸ்ட்

இப்படிக்கு,

SMS ஸ்பெஷலிஸ்ட் ராஜமழை.

ராஜமழை, சின்னமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.