விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 223

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன.

News image
Updated On :31 டிசம்பர் 2019, 9:45 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன. கணேஷ் யாரையோ போனில்அழைக்க முயல டவர் காட்டவில்லை. வாகனங்கள் ஓடவில்லை. அவர்கள் என்ன செய்வது என யோசிக்கும்போது அங்கு ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்டுள்ளதாய் ஒருவர் சொல்கிறார். பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவர்களால் வீட்டுக்குப் போக முடியாத நிலை. புரொபஸர் தனது நண்பர் விஜயபரகேசரியின் வீடு அருகில் உள்ளதாகவும் அங்கு சென்று இரவு தங்கலாம் என்றும் சொல்கிறார். அப்போது ஒரு போலீஸ் வாகனம் வர புரொபஸர் அதை நோக்கி சென்று விசாரிக்கிறார்.
புரொபஸர் காவல் வாகனத்தை நிறுத்தி: சார் நாங்க இங்கே இருந்து போகணும்...
காவலர்: போய்யா. உன்ன யாரு வேணாமுன்னா?
புரொபஸர் தனக்குள்: What impudence!
காவலர்: ஆங்? என்ன எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு நினைச்சியா?
கணேஷ்: அதென்ன இம்பியூடென்ஸ்?
புரொபஸர்: சும்மா இருடா?
காவலர்: என்ன எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு நினைச்சியா? நானும் படிச்சவன் தான்.
ஜூலி: தெரிஞ்சா நீயே சொல்லேன்? 
காவலர்: யாரது குழந்தை குரல்ல பேசுறது? நீயா?
கணேஷ்: இல்ல சார்.
புரொபஸர்: அது வந்து எங்களோட நாய்.
காவலர்: என்ன எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு நினைச்சியா? நானும் படிச்சவன் தான். என்னா சொல்றே? நாய் பேசுதுங்குறே... பிசிறு தட்டுதே. ஏதாவது நக்சலா நீ. ஐடி கார்ட் இருக்குதா?
புரொபஸர் அடையாள அட்டையைத் தேடி எடுக்கிறார்.
கணேஷ்: ஜூலி, இப்ப என்ன சொன்னதுக்காக இவர் கோபப்படுறார்? அதோட அர்த்தம்தான் என்ன?
ஜூலி: Impudence என்றால் impertinence. Insolence. Rude behaviour. திமிர்த்தனம், பொறுப்பற்ற தடித்தனம்.
காவலர் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு: இங்கிலீஷ் பேசுறீங்களா? 144 தடை உத்தரவு போட்டிருக்காங்க தெரியுமில்ல. 
கணேஷ்: இங்கிலீஷ் பேசறதுக்கும் தடையா?
காவலர்: பேசறதுக்கே தடைய்யா. வாயே திறக்கக் கூடாது. ஓடிருங்க. இல்ல ஓடக் கூடாது. சத்தமில்லாம ஓரமா நடந்தே போங்க.
புரொபஸர்: பஸ், ஆட்டோ ஏதும் இல்ல. நீங்களே எங்களை போற வழியில இறக்கி விட முடியுமா?
காவலர்: வேணும்னா நைட்டு செல்லில தங்கிட்டு நாளைக்குப் போறீங்களா? உன்ன மாதிரி ஒரு இங்கிலீஷ் வாத்தியால தான் நான் காலேஜில ஒரு பேப்பர் பெயிலாகி கஷ்டப்பட்டு கிளியர் பண்ண ஐந்து வருசம் எடுத்துக்கிட்டேன். 
புரொபஸர்: You are quite grudge-bearing. நான்அப்படி யாரையும் பெயில் பண்றது இல்லப்பா.
ஜூலி: But  he  is  right.
காவலர்: பாரு நாயே ஒத்துக்கிச்சு. ஆனால் நாய் எப்படி பேசுதுன்னுதான் தெரியல. ஏதாவது பேன்ஸிடிரஸ்ஸா?
ஜூலி: இல்ல நான் நிஜநாய் தான். வேணும்னா கடிச்சு காட்டவா?
காவலர்: ஐயய்யோ வேணாம். சரி நாயே நான் சொன்னதை ஏன் ரைட்டுன்னே நீ?
ஜூலி: ஒரு பேப்பரை கிளியர் பண்ண ஏன் அஞ்சு வருசம் எடுத்துக்கிட்டீங்க? அவ்வளவு கஷ்டப்பட்டு கடைசியில ஒரு கான்ஸ்டபிள் ஆகிட்டீங்க. 
காவலர்: வேறென்னதான் பண்றதுப்பா?
ஜூலி: படிப்பு முக்கியமில்ல. அந்த ரெண்டு வருசத்தில் ஒரு கட்சியில சேர்திருந்தீங்கன்னா அரசியல்ல பெரிய ஆளா வந்திருப்பீங்க. எல்லாரும் உங்களைப் பார்த்து சலூட் அடிச்சுருப்பாங்க.
காவலர்: அருமையா சொன்னேப்பா. உனக்காக 
இந்த ஆளை மன்னிச்சுவிட்டுடறேன். உனக்கு மட்டும் லிப்ட் தரட்டுமா?
ஜூலி: வேணாம் இவங்க கூடயே வரேன்.
அந்த வாகனம் கிளம்புகிறது.
புரொபஸர் (வாகனம் போன திசையைப் பார்த்து): Absolute impudence. Arrogance. 
கணேஷ்: திமிருன்னு சொல்றதுக்கு ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை.
ஜூலி: அதுக்கு நீ இந்த வார்த்தையோட மூலச் சொல்லை தெரிஞ்சிக்கணும். Impudence என்றால் pudens எனும் இத்தாலிய சொல்லில் இருந்து வருகிறது. அதன் பொருள்அவமானப்படுவது, மரியாதையை, கெளரவத்தை இழப்பது. Im என்பது prefix. அதாவது முன்னொட்டு. அதன் பொருள் "இல்லை'. இப்போது இச்சொல்லுக்கு மானங்கெட்டு நடந்து திமிர்த்தனமாய் கொள்வது எனஅர்த்தம் வருகிறது. ஒருவர் தனது செயலினால் தனக்கு இழுக்கு வரும் என்பதை அறிந்தும் பொருட்படுத்தாமல் தப்பு செய்வது. 
கணேஷ்: ஓ... இப்போ புரியுது. ஆனால் அதென்ன grudge?
ஜூலி: சொல்றேன். அங்கே இன்னொரு டிராபிக் போலீஸ் ஜீப் வருது. உதவி கேட்போமா?
(அவர்களின்அந்த ஜீப்பை நோக்கிச் செல்கிறார்கள்)
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.