/

கரோனாவை அழிக்கும் கருவி!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) , "லாசெர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.

News image
Updated On :14 மே 2020, 12:01 pm

ந.ஜீ.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) , "லாசெர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. "யூவி பிளாஸ்டர்' என்று அழைக்கப்படும் இந்தக் கருவியின் வேலை கரோனா வைரஸை அழிப்பதுதான்.

கரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ள இடங்களை ஏதேனும் வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி தூய்மைப்படுத்தலாம். ஓர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் பொருள்களை வேதிப் பொருள்களைக் கொண்டு தூய்மைப்படுத்த முடியாது.

பெரிய அளவில் மக்கள் கூடும் பெரும் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், ரயில்நிலையங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை கரோனா தொற்றிலிருந்து தூய்மைப்படுத்த இந்தக் கருவி உதவுகிறது.

12X12 அடி பரப்பளவுள்ள ஓர் அறையைத் தூய்மைப்படுத்த இந்தக் கருவியை 10 நிமிடங்கள் பயன்படுத்தினால் போதும். 400 சதுர அடி பரப்பளவு உள்ள ஓர் இடத்தைத் தூய்மைப்படுத்த 30 நிமிடங்கள் ஆகும். இந்தக் கருவியை பல்வேறு நிலைகளில் பொருத்தித் தூய்மைப்படுத்த முடியும்.

இந்தக் கருவியை தொலை தூரத்திலிருந்து இயக்கலாம். லேப்டாப், செல்பேசி மூலமாக Wifi இணைப்பு மூலமாக இயக்கலாம்.

இதில் 43 வாட்ஸ் திறனுள்ள 6 புற ஊதாக் கதிர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வரும் ஒளி கரோனா வைரஸை அழித்துவிடுகிறது.

தூய்மைப்படுத்தும் பணி நடக்கும்போது, இந்த மயஇ ஒளி மனிதர்கள் மீது படக் கூடாது. யாராவது எதிர்பாராதவிதமாக வந்துவிட்டால், உடனே இந்தக் கருவியைச் செயல்படாமல் நிறுத்திவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.