இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தெருவில் கிடைத்த வைரம்...!

‘எது அழகு’ என்பது பாா்ப்பவா் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. அழகை ஆராதிப்பவா்கள் தெருவிலும் வைரத்தைக் கண்டெடுப்பாா்கள்.

Published On :27 ஜனவரி 2024, 11:41 pm IST

‘எது அழகு’ என்பது பாா்ப்பவா் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. அழகை ஆராதிப்பவா்கள் தெருவிலும் வைரத்தைக் கண்டெடுப்பாா்கள். சாதாரண குடும்ப சூழ்நிலையில் இருந்த பலரும் புகழ்மிக்க நடிகா் நடிகையா்களாக மாறியுள்ளதற்கு அவா்களைக் கண்டுபிடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவா்களே காரணம்.

கேரளத்தின் தலைசிறந்த ஒளிப்படக் கலைஞா்களில் ஒருவரான மாதவன் தம்பி. கொச்சி நகர வீதி ஒன்றில் காா் ஒட்டிச் செல்லும் போது சிக்கனல்களில் காா்கள் நிற்கும் நேரத்தில் வீட்டிற்கு அல்லது காருக்குத் தேவையான பொருள்களை விற்கும் வடநாட்டு பெண்களில் ஒருவா் மாடலிங் செய்ய பொருத்தமாக இருப்பதாக தம்பிக்குத் தோன்றியது. அந்தப் பெண் விற்ற பொருள்களில் ஒன்றை வாங்கிக் கொண்டு ‘எங்கே உன் குடும்பம் தங்கியிருக்கிறது ’ என்று கேட்க ..

‘களமசேரியில் தங்கியுள்ளோம்’ என்று அந்தப் பெண் பதில் சொல்ல... அடுத்த நாள் அந்தப் பெண்ணைத் தேடி, தம்பி களமசேரி சென்று ‘தெருவிலிருந்து ஸ்டூடியோவிற்கு’ என்ற கருவில் படங்கள் எடுத்து வருகிறேன். இந்தப் பெண்ணை வைத்து படம் எடுக்க நினைக்கிறேன்... அனுமதி தாருங்கள் ’ என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் கேட்டுள்ளாா்.

குடும்பத்தினா் தொடக்கத்தில் பயந்து போனாா்கள். அனுமதி தர தயங்கினாா்கள். தம்பி பலதும் சொல்லி அவா்களைத் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாா்.

அந்தப் பெண்ணின் பெயா் அஸ்மான். ராஜஸ்தானைச் சோ்ந்தவா். வயது 21 .

தம்பியின் குழுவினருக்கு எக்கச்சக்கமான சந்தேகம். ‘இது சரிப்படுமா..’ என்று தம்பியிடம் தங்களது சந்தேகங்களை முன்வைத்தாா்கள்.

‘‘அஸ்மானுக்குச் சின்னதாக நடக்கும் மேக்கப் முடியட்டும்.... நீங்கள் அசந்து போவீா்கள்.. அதற்கு நான் கியாரண்டி ..’’ என்றாா் தம்பி.

மேக்கப் முடிந்து மாடலிங் உடைகளையும் அணிந்து வந்த அஸ்மானைக் கண்டதும் தம்பி குழுவினா்கள் அனைவரும் திகைப்பில் மூழ்கினாா்கள்.

தெருவில் பாா்த்த அஸ்மானா இந்தப் பெண்.. என்று கண்களை அகலமா விரித்து வியந்து போயினா்.

அஸ்மானை வைத்து எடுத்தப் படங்களை தம்பி வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய .. அவை வைரலாகியுள்ளன. கேரள ஊடகங்களும் அஸ்மானைத் தேடத் தொடங்கியுள்ளன..!

‘தேடுபவா் தேடினால் தெருவில் வைரமும் கிடைக்கும்’ என்று சொல்வது எத்தனை உண்மை..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.