இளநீர் - மில்க்மெய்ட் பானம்
இளநீரை வெட்டி நீரை எடுத்து தனியாக வைக்கவும். பின்னர், அதன் உள்ளிருக்கும் வழுக்கையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


தேவையானவை:
இளம் வழுக்கையுடன் கூடிய இளநீர் - ஒன்று
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
மில்க்மெய்ட் - 2 தேக்கரண்டி
செய்முறை:
இளநீரை வெட்டி நீரை எடுத்து தனியாக வைக்கவும். பின்னர், அதன் உள்ளிருக்கும் வழுக்கையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், எடுத்து வைத்துள்ள இளநீருடன் சர்க்கரை, மில்க்மெய்ட் சேர்த்து மிக்ஸியில் ஜூஸ் ஜாரிலிட்டு மிதமாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள இளநீர் வழுக்கையின்துண்டுகளைச் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் குளிரவைத்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...