மாநிலங்களவையில் தமிழக மங்கை!

பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்.வி.நடராசன், திமுக முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.  கட்சி துவங்கப்பட்ட போது அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர். 
மாநிலங்களவையில் தமிழக மங்கை!


பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்.வி.நடராசன், திமுக முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.  கட்சி துவங்கப்பட்ட போது அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர். 

ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக என்.வி.நடராசன் கருதப்பட்டார். இவரது மகன் என்.வி.என்.சோமு திமுக சார்பில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராக இருந்தவர். மத்திய அமைச்சர் பதவியிலும் இருந்தார்.

சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, திமுகவின் மருத்துவ அணியின் செயலாளராக 2013-ஆம் ஆண்டு முதல் உள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் 2011-ஆம் ஆண்டில் மாதவரம் தொகுதியிலும்,  2016-ஆம் ஆண்டில் தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இருப்பினும், மு.க.ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் கனிமொழி சோமுவை திமுக வேட்பாளராக நிறுத்தினார். தற்போது போட்டியின்றித் தேர்வாகிறார் கனிமொழி.

மாநிலங்களவையில் தற்போது தமிழகம் சார்பில் இருக்கும் ஒரே பெண் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு தான்.

மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற, மகப்பேறு மருத்துவரான கனிமொழி சென்னையில் "தாய்மை' என்ற பெயரில் மகப்பேறு மருத்துவமனையை நடத்திவருகிறார். குழந்தைப் பேறு இல்லாத பலருக்கு தனது  சிகிச்சையின் மூலம்  குழந்தைப் பாக்கியம் கிடைக்க உதவியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com