கலாசார கலைவிழா ! 

வடகிழக்கு மாநில கலைஞர்களின் மேம்பாட்டிற்காக  "ஆக்டேவ்- 22 வடகிழக்கு மாநில கலைவிழா' என்ற திருவிழா மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
கலாசார கலைவிழா ! 
Updated on
2 min read

வடகிழக்கு மாநில கலைஞர்களின் மேம்பாட்டிற்காக  "ஆக்டேவ்- 22 வடகிழக்கு மாநில கலைவிழா' என்ற திருவிழா மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சி ரெய்ப்பூரில் நடத்தப்பட்டது.  2-ஆவது நிகழ்ச்சி தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் மார்ச்12 முதல்15-ஆம் தேதி வரை கைவினைப் பொருள் கண்காட்சி, உணவுத் திருவிழா, நடனம் என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவின் தொடர்ச்சியாக  மார்ச் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில்,  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், ஒடிசா, உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். இக்கலைத் திருவிழாவில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

வடகிழக்குப் பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் கலாசார செழுமை மிக்கதாகும். அப்பகுதியில் வாழும் பெரும்பான் மையான மக்கள் இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், இசை மற்றும் நடன வடிவங்களில் பரம்பரை பரம்பரையாக வல்லமை பெற்றவர்கள். 

அதுபோன்று வடகிழக்கு மாநிலங்களை இணைத்து  7சகோதரிகள் என்றழைக்கின்றனர். இதில்,  8-ஆவது மாநிலமாக சிக்கிம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,  சிக்கிம் 7சகோதரிகளின் சகோதரர் என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பகுதி பொதுவாக கோழிக்கழுத்து எனச் சொல்லப்படும். குறுகிய நெடுவழி மூலம் சிலிகுரி பிராந்தியத்துக்கு அருகில் நாட்டின் இதர பாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும் வடகிழக்குப் பிராந்தியமானது வங்கதேசம், பூட்டான், சீனா, நேபாளம் மற்றும் மியான்மர் என ஐந்து அயல்நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் சுமார் 30முதல் 35சதவிகித நிலமே சமவெளிப் பகுதியாகும். இந்த சமவெளிப் பகுதியானது பிரம்மபுத்திரா, பராக் மற்றும் இம்பால் பள்ளத்தாக்குகளில்தான் பெரும்பாலும் உள்ளன. மீதியுள்ள நிலப்பகுதி முழுவதும் மலைப்பகுதிகளே ஆகும்.  இவர்கள் பெரும்பாலும் சடங்குகளுக்கு உரிய சால்வைகளை துவைப்பதில்லை. அவற்றை வெறுமன வெயிலில் உலர வைத்து, மீண்டும் பயன்படுத்துவார்களாம். இதுபோன்ற வரலாறுகளை கொண்ட கலைஞர்களில்,  கலாசார கலை விழாவில் பங்கேற்ற சில பெண்களின் கருத்துகள்: 

நாகலாந்து - ஹர்குவ்லோ அசாமின் கிழக்கிலும் பர்மாவுக்கு மேற்கிலும் அமைந்துள்ள நீண்ட குறுகிய மலைப்பிராந்தியமே நாகலாந்து ஆகும். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இது இந்திய திருநாட்டின் மிகச்சிறந்த மாநிலங்களில் ஒன்று. வட திசையில் அருணாச்சல பிரதேசமும், தெற்கில் மணிப்பூரும் உள்ளன. 

கொஹிமாவுக்கு அருகிலுள்ள கோனோமா கிராமமானது வீரத்துக்கும் தைரியத்துக்கும் பெயர் பெற்றதாகும். பல்வேறு உயரப்பகுதிகளில் 20-வகையான நெல் வகைகள் விளையும் நிலப்பகுதிகள் அற்புதமான அழகிய காட்சியைத் தரும். நாகர்களின் சால்வைகள் "அங்கமி நாகா' என்று சொல்வர். இவற்றின் பிரகாசமான வண்ணங்கள், பூத் தையலில் உருவாக்கப்பட்ட விலங்குகளின் வடிவங்களும், பழங்கால நாகர்களின் கதைகளை வெளிப்படுத்தும் துணிவகைகளும் மிகவும் புகழ்பெற்றவை. 

திரிபுரா- உணவு மற்றும் நடன குழுவினர்.

திரிபுராவின் பிரபலமான சைவ உணவு ஆவன் பாஸ்கோய்(ஆவன் பங்கி) இது ஒட்டும் தன்மையுள்ள அரிசியுடன் வெள்ளைப் பட்டாணி, பருப்புகள் தேங்காய், வெல்லம் கலந்து தேவையான உப்பு சேர்த்து பாங்கோயி இலை அல்லது வாழை இலையை கூம்புபோல் செய்து அதனுள், அரிசி கலவையை இட்டு ஆவியில் வேக வைத்து தயார் செய்யப்படும் "போடா பிதா' என்ற உணவு. 

சங்கராய் எங்கள் மாநிலத்தின் சிறப்புப் பண்டிகை. இதில் மோக் சமூகத்தின் இளைய உறுப்பினர்கள் ஒரு வீட்டிலிருந்து புனிதமான மரத்தை (கல்பதரு)தங்கள் தலையில் சுமந்து  எடுத்துவந்து வீட்டிற்குச் செல்கின்றனர். இந்த விழாவில் பாடல் மற்றும் நடனமும் உள்ளது. மங்கள குடத்தில் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சந்தனக் கலவையைக் கொண்டு சமுதாயப் பெரியவர்கள் நீராடி, கிராமத்தில் உள்ள வீட்டு வாசல்களில் தேங்காய் தண்ணீரைத் தெளிப்பார்கள். ஒரு பிரம்மாண்ட விழாவில் போதி விருட்சத்தின் வேர்களில் நறுமண நீர் ஊற்றப்படுகிறது. பாரம்பரிய கூயாங்கின் துணையுடன் நடனம் செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com