அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பீர்க்கங்காய் கிரேவி

தாளிக்க எடுத்துக் கொண்டவைகளைத் தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், டோமோடாஃப்யூரி சேர்த்து வதக்கி எடுத்து பீர்க்கங்காய் சேர்த்து வதக்க வேண்டும். 

News image
Updated On :4 பிப்ரவரி 2023, 5:54 pm

உ.இராமநாதன்

தேவையானப் பொருள்கள்:

நறுக்கிய பீர்க்கங்காய்- 1 கிண்ணம்
வெள்ளரி விதை- அரை கிண்ணம்
நறுக்கிய வெங்காயம்- 1 கிண்ணம்
பச்சை மிளகாய்- 5
இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
தேங்காய் துருவல்- அரை கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
டோமேடா ஃப்யூரி- அரை கிண்ணம்
தாளிக்க: சீரகம், கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்- 3 தேக்கரண்டி

செய்முறை: 

தாளிக்க எடுத்துக் கொண்டவைகளைத் தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், டோமோடாஃப்யூரி சேர்த்து வதக்கி எடுத்து, எண்ணெய் பிரியும்போது பீர்க்கங்காய் சேர்த்து வதக்க வேண்டும். 
சிறிதுநீர் தேவைப்பட்டால் தெளித்து கிளறி மூடவும். வெள்ளரி விதை, தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்து வதக்கும்போது, பீர்க்கங்காயுடன் சேர்த்து வதக்கவும். இந்த கிரேவியில் எண்ணெய் பிரியும்போது, அடுப்பை நிறுத்திவிடவும். பரிமாறும்போது, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

லோ. சித்ரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.