எஸ்.நிரஞ்சனி
டிபன் வகையறாக்களுக்கு குழம்பு தயாரிக்கும்போது, அதனையே கொஞ்சம் அதிகமாகத் தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து தூளான வடவங்களை எண்ணெயில் பொரித்து சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும். பத்து நிமிடங்கள் கழித்து நன்றாகக் கலந்துவிட்டால், சாதத்துக்குப் போட்டு பிசைந்து விடலாம். தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை. தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள சாப்பிடலாம். காய்கறிகள் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கைகொடுக்கும்.
தட்டை செய்யும்போது வரமிளகாய் பொடி போடுவதற்குப் பதில் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அதில் தேவையான பச்சை மிளகாயைப் போட்டு அரைத்து கெட்டியாக எடுத்து, 1 கிலோ அரிசிக்கு கால் கிலோ பொட்டுக் கடலையை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து கறிவேப்பிலை, தேங்காய் கீற்று, வெண்ணெய், எள், ஒரு கைப்பிடி ஊறவைத்து, கடலைப் பருப்பு சேர்த்து பிசைந்து தட்டைகளாகத் தட்ட வேண்டும்.
ஒவ்வொரு தட்டையையும் இரண்டு இடங்களில் போக்கால் குத்தி வெண்ணெயில் பொரித்து எடுத்தால் பொன்னிறமாக வடைகள் தயார். வரமிளகாய் சேர்ப்பதால் வடை சிவந்துவிடும். அதற்குப் பதில் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.