12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பனீர் கோகனட் பால்ஸ்

பாலை கொதிக்கவிட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்டினால், பனீர் கிடைக்கும்.

பனீர் கோகனட் பால்ஸ்

Published On :

 தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர்

வினிகர் - 2 தேக்கரண்டி

பொடித்த சர்க்கரை - கால் கிண்ணம்

ஃபுட் கலர் (ரோஸ்) - 1 சிட்டிகை

ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்

தேங்காய் - ஒரு பெரிய மூடி

சர்க்கரை - அரை கிண்ணம்

ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

பாலை கொதிக்கவிட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்டினால், பனீர் கிடைக்கும். பனீருடன் பொடித்த சர்க்கரை, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள்.

சர்க்கரை உருகி, இளகி திரும்ப சற்று சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கிவிட வேண்டும். அதில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, அதனுள் பனீர் உருண்டை களை வைத்து, நன்கு மூடி உருட்டுங்கள். ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்து, பரிமாறுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.