விமலா சடையப்பன்
பகோடா செய்யும்போது, சிறிது நெய், உப்பு போட்ட தயிரை கலந்துகொண்டால், மொறுமொறுப்பாக இருக்கும்.
சாம்பாரை இறக்கும் முன்பு 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு, 1 தேக்கரண்டி வரமல்லி, ஒரு வரமிளகாய் வறுத்து அரைத்து கலக்கினால், சுவையாக இருக்கும்.
ஒரு பெரிய முழு நெல்லிக்காயை வறுத்து பருப்பு மற்ற சாமான்களோடு வதக்கி, துவையல் அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
தயிர் உறைய வைக்கும்போது, மண்சட்டியில் உறைய விடவும். கெட்டியாக உறைவதுடன் எளிதில் புளிக்காது.
ரசம் இறக்கியதும் ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தல்லியை மிதக்கவிட்டால், ரசம் மணமணக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.