தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், சுப காரியங்கள் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குவோம். அந்த நகைகளைச் சுத்தமாகவும் நீண்ட நாள்களுக்குப் புதிது போல் எப்படி பராமரிப்பது தெரியுமா?
அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்திருக்கும். இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமலும், வளையாமலும் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைத்துகொள்ளுங்கள்.
வெள்ளி ஆபரணங்கள் வைத்துள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால், வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம். மேலும், அதனை அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.
முத்துகள் பதித்த நகைகளை நீரில் அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு: மேலும் 2 இளைஞா்கள் கைது

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி: வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது

போலி நகை விவகாரம்: நகை மதிப்பீட்டாளா் சடலமாக மீட்பு

கத்திமுனையில் மிரட்டி 15 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை: போலீஸாா் தீவிர விசாரணை
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

