
கொத்தவரங்காய் சிறுநீரைச் சுத்தப்படுத்தும்.
சுண்டைக்காய் வயிற்று நோய்களைப் போக்கும்.
தக்காளிக் காயைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். உடல் வீக்கம் மறையும்.
பரங்கிக்காய் பித்தக் கோளாறுகளைப் போக்கும்.
முள்ளங்கியைச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.
வெங்காயத்தையும் வெங்காயப் பூவையும் சம அளவில் சேர்த்து, வதக்கி வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.
பல் வலிக்கு வெங்காயத்தையும், வெங்காயப் பூவையும் சமஅளவு எடுத்து, சாறு பிழிந்து அன்றாடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் பல் வலி, ஈறு வலி குணமாகும்.
வெங்காயப் பூவை தயிரில் அரிந்து போட்டு சாப்பிட மூல நோய் மறையும். வெங்காயப் பூவை நெய்விட்டு, வதக்கி தினமும் சாப்பிட்டால் நல்ல உறக்கம் வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.