தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி- கால் கிலோ
ஏலக்காய்-7
முந்திரிப் பருப்பு- 12
நெய்- 300 கிராம்
சர்க்கரை- அரை கிலோ
செய்முறை:
ஜவ்வரிசியை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிவந்துப் போகாமல் பொரிக்கவும். பொரித்த ஜவ்வரிசி நன்றாக ஆறியதும் நைசாக அரைக்கவும். பிறகு ஒன்றுக்கு ஒன்று என்ற
அளவில் ஜவ்வரிசி மாவையும், சர்க்கரையையும் சேர்த்து அத்துடன் ஏலக்காய், முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து கலக்கவும். வாணலியில் நெய்யை ஊற்றி சூடானவுடன் கலந்துவைத்துள்ள கலவையில் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான ஜவ்வரிசி லட்டு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.