தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

பனீர் டிக்கா

இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும், அதனுடன் சீரகப் பௌடர், எலுமிச்சைச் சாறு, 2 மேசைக்கரண்டி எண்ணெய், மஞ்சள் கேசரி பௌடர், உப்பு, கல் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

News image
Updated On :23 மே 2025, 1:37 pm IST

தேவையான பொருள்கள்:

குட மிளகாய்- 1 வட்டமாக நறுக்கியது

வெங்காயம்- 2 வட்டமாக நறுக்கியது

தயிர்- 1 மேசைக்கரண்டி

இஞ்சி- ஒன்றரை அங்குலத் துண்டு

காய்ந்த மிளகாய்- 2

எலுமிச்சைச் சாறு- அரை மூடி

சீரகப் பௌடர்- அரை தேக்கரண்டி

உப்புத் தூள்- 1 தேக்கரண்டி

தக்காளி- 1

பனீர்- 250 கிராம் சிறு துண்டுகளாக

பூண்டு- 4 பற்கள்

கல் உப்பு- அரை தேக்கரண்டி

மஞ்சள் நிற கேசரி பௌடர்- சிறிது

எண்ணெய்- 4 மேசைக்கரண்டி

செய்முறை:

இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும், அதனுடன் சீரகப் பௌடர், எலுமிச்சைச் சாறு, 2 மேசைக்கரண்டி எண்ணெய், மஞ்சள் கேசரி பௌடர், உப்பு, கல் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். விழுதில் பாதியை பனீர் துண்டுகள் மேல் பூசி, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

வெண்ணெய் தடவிய தட்டில் பனீர் துண்டுகளை அடுக்கி ஓவனில் 15 நிமிடங்கள் சூடு செய்யவும். ஒரு வாணலியில் 2 மேசைக் கரண்டி எண்ணெய்விட்டு குடமிளகாய், வெங்காயம் சதையை அகற்றிய தக்காளி, இஞ்சி- பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து வதக்கி, பனீர் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.