தேவையான பொருள்கள்:
இட்லி- 5
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி - தலா 4
கொத்தமல்லி- 1 கட்டு
சீரகம், சில்லி சாஸ், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா தூள் - தலா 1 தேக்கரண்டி
மைதா மாவு- 200 கிராம்
தக்காளி சாஸ், சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். மைதா மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்துகொள்ள வேண்டும். இட்லி துண்டுகளை மைதா மாவில் புரட்டி எண்ணெயில் பொரித்து வைத்துகொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு, தாளிக்க வேண்டும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். சீரகம் தாளித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த தக்காளிச் சாறு, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்றாகக் கொதித்தவுடன் மைதா மாவில் பொரித்துவைத்த இட்லியைப் போட்டு புரட்ட வேண்டும். அதனுடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ் போட்டு நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். அதன் மேல் வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவ வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.