கார அவல் சிவ்டா - (மராட்டிய மாநில ஸ்பெஷல்)
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அவலை வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
கார அவல் சிவ்டா - (மராட்டிய மாநில ஸ்பெஷல்)
தேவையான பொருள்கள்:
கெட்டி அவல் - 3 கிண்ணம்
வேர்க்கடலை - அரை கிண்ணம்
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
முந்திரி (உடைத்தது) -3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் -4 கிண்ணம்
பூண்டு பற்கள் (நசுக்கி வைத்தது) - 4
பெருங்காயம், மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஓரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அவலை வறுத்து ஒரு தட்டில் கொட்டவும். அதே வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, வேர்க்கடலை, முந்திரி, பொட்டுக்கடலை முதலியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து அவல் வறுத்துக் கொட்டிய அதே தட்டில் கொட் டவும்.
மீதியுள்ள எண்ணெயை அதே வாணலியில் ஊற்றி, நறுக்கிய தேங்காய், நசுக்கிய பூண்டு, பெருங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், சர்க்கரை, கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். அதை தட்டில் வறுத்துக் கொட்டிய அனைத்துப் பொருள்களுடன் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

