விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாடுகள் அறிவோம்

ஜப்பான் ஜப்பான் ஒரு தீபகற்பம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆசியாவின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் கடல்கள் சூழ்ந்த அழகிய சிறு தீவுகளைக் கொண்ட நாடு. ஹொக்கைடோ,ஹொன்சு,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:35 pm

அபி

ஜப்பான்

ஜப்பான் ஒரு தீபகற்பம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆசியாவின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் கடல்கள் சூழ்ந்த அழகிய சிறு தீவுகளைக் கொண்ட நாடு. ஹொக்கைடோ,ஹொன்சு,ஷிகோகு,கியூஷு என்கிற 4 முக்கிய தீவுகளைக் கொண்டது. மேலும் 4,000 குட்டித் தீவுகளும் இந்நாட்டிலுள்ளன.

ஜப்பானின் வடக்கே சைபீரியா (கடுங்குளிர்ப் பிரதேசம்), தெற்கே கொரியா மற்றும் சீனாவும் உள்ளன.

ஜப்பானில் ஐந்தில் நான்கு பங்கு பரப்பளவை மலைகளே ஆக்கிரமித்துள்ளன. ஹொன்சு பகுதியின்நடுவே ஜப்பான் ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள மிக உயரமான சிகரம் ஃபியூஜி. கோன் ஐஸ்கிரீம் வடிவத்தில் அமைந்துள்ள இது ஒரு எரிமலை! ஜப்பானியர்களின் புனித மலையாக இது கருதப்படுகிறது!

ஜப்பான் நாடு பூமியின் மிக அபாயகரமான பகுதியில் இருப்பதால் அடிக்கடி இங்கே பூகம்பங்கள் ஏற்படுகின்றன. ஓர் ஆண்டில் ஏறக்குறைய ஆயிரம் பூகம்பங்கள் இங்கே ஏற்படுகின்றனவாம். 200 எரிமலைகளும் உள்ளன. இவற்றில் 60 மலைகள் எப்போதும் கனன்று கொண்டே இருக்கின்றனவாம்! (இங்கே எப்படி மக்கள் வாழ முடியும் என்று தோன்றுகிறதல்லவா?)

ஜப்பானிய மக்கள் இயற்கையை மிகவும் நேசிக்கிறவர்கள். அதன் அழகில் மயங்கிப் போகிறவர்கள்! இங்குள்ள மலைகள், எரிமலைகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் எல்லாவற்றுக்கும் ஆன்மாக்கள் உண்டு, அவைகள் தெய்வீகமானவை என்று ஜப்பானியர்கள் தீவிரமாக நம்புகின்றனர். மலைகள் போக மீதி உள்ள பகுதிகளில் சுமார் 12 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதனால் இங்கு நெருக்கடி அதிகம். வனவிலங்குகள் பறவைகள் இங்கு அரிதாகவே காணப்படுகின்றன. மாசு கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்பட்டாலும் அளவுக்கதிகமான சாலைகள், கட்டடங்கள் ஆகியவற்றால் விலங்குகளுக்குப் போதுமான இடம் இல்லை. இதனால் 130 வகை விலங்குகள் அரிய வகைகளாக (சீக்கிரம் அழிந்துவிடக்கூடியவைகளாக) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் கடல் பகுதி மிகவும் செழிப்பாக இருப்பதால் ஏராளமான மீன் வகைகளும் கடல்வாழ் உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

ஜப்பானுக்கு 30,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. ஜப்பானின் ஆதிமக்களான ஜோமோன் என்ற இனத்தவர் 12,000 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வாழ்ந்திருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் அய்னு என்ற இனத்தவர் சைபீரியாவிலிருந்து படகுகள் மூலம் ஜப்பானுக்கு வந்திருக்கின்றனர்.

இந்த இரண்டு இனத்தவர்களும் சேர்ந்து வாழத் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் செடிகள் சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

கி.மு. 300-ல் கொரியா மற்றும் சீனாவிலிருந்து யயோயி என்ற இனமக்கள் ஜப்பானின் ஹோன்சு பகுதிக்கு வந்து வாழத் தொடங்கினர். இவர்கள் நெசவு, கருவிகள் செய்தல் மற்றும் விவசாயத்தில் தேர்ந்தவர்கள். இவர்கள்தான் ஜப்பானில் முதன்முதலில் அரிசி பயிரிடத் தொடங்கியவர்கள். (இவர்கள் அதிகமாக நீர் இருக்கும் பகுதிகளில்கூட விவசாயம் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்தவர்கள்).

கி.மு. 660-ல் ஜப்பானின் முதல் பேரரசராக ஜிம்மு டென்னோ என்பவர் ஆட்சி பொறுப்பேற்றார். கி.பி. 12-ம் நூற்றாண்டு வரை பேரரசர்களின் ஆதிக்கத்தில் ஜப்பான் இருந்தது. அதன் பிறகு ஷோகன்ஸ் என்ற ராணுவப்படையினர் மன்னரை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். இவர்கள் பெரும்பாலும் கொடுங்கோல் ஆட்சிதான் புரிந்து வந்தனர்.

1543-ம் ஆண்டில்தான் ஐரோப்பியர்கள் ஜப்பானில் காலடி எடுத்து வைத்தனர். கூடவே கிறிஸ்துவ மதத்தையும் மற்றும் புதிய புதிய ராணுவத் தளவாடங்களையும் ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால் 1635-ல் ஷோகனஸ் ராணுவ அடக்குமுறையால் ஜப்பானுக்கு வெளிநாட்டினர் வருவதும் ஜப்பானிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தனிமைப்படுத்தல் 200 ஆண்டுகள் நீடித்தது. 1868-ம் ஆண்டு ஷோகன்ஸ் ஆட்சி வீழ்ச்சியுற்றது. பேரரசர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறினர். இதன்

பிறகுதான் ஜப்பானில் பெரிய மாற்றங்களும் தொழிற்புரட்சியும் ஏற்பட்டன. பெருமளவு நவீனமயமாக்கப்பட்டது ஜப்பான்.

முதல் உலக மகா யுத்தத்தின்போது (1914-1917) ஜப்பான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து போரிட்டது. ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது (1941-1945) இதே ஜப்பான் அமெரிக்காவுக்கும் நேசப்படைகளுக்கும் எதிரணியில் சேர்ந்து போரிட்டது. 1945-ம் ஆண்டு அமெரிக்கப் படை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி (அப்போதுதான் உலகிலேயே முதன் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது) பேரழிவை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 1,15,000 மக்கள் இத்தாக்குதலில் மாண்டு போனார்கள். இந்தத் தாக்குதலின் பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஜப்பான் சரணாகதி அடைந்தது.

அதன் பிறகு அந்தப் பேரழிவிலிருந்து ஜப்பானிய மக்கள் வெகுவிரைவில் மீண்டெழுந்து இன்றுவரை சுறுசுறுப்பாக இயங்கி, பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

ஜப்பானியர் எந்தவிதக் கஷ்டமான வேலையையும் சிரித்த முகத்துடன் செய்து முடிக்கும் அளவுக்கு மன உறுதி கொண்டவர்கள். இளையோர்கள் பெரியவர்களுக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொடுக்கும்படியாக வளர்க்கப்பட்டு வருகிறார்கள். தங்கள் குடும்பத்துக்காகவும், தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்காகவும் நாட்டுக்காகவும் எந்தவித தியாகத்தையும் செய்யத் தயங்காதவர்களாக வளர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் ஜப்பான் உலகின் மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. இது ஒரு தொடர்கதைதான்!

ஜப்பானியர்களின் உணவுப் பழக்கம் மேற்கத்திய நாடுகளின் வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உணவில் அதிக அளவு அரிசி, மீன், காய்கறிகள் சேர்த்துக் கொள்வார்கள். அசைவ உணவுகளை மிகவும் குறைவாகவே சாப்பிடுவார்கள். கொழுப்புச் சத்து குறைவான உணவையே விரும்பிச் சாப்பிடுவதால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். இதனால் ஜப்பானியர்கள் மற்ற எந்த நாட்டு மக்களையும் விட மிக அதிக நாட்கள் வாழ்கின்றனர்.

உலகிலேயே இன்றும் மன்னராட்சி இருக்கின்ற ஒரு சில நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அவர்களுக்குப் பெரிய அளவில் அதிகாரம் இல்லையென்றாலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் கலாசார சின்னமாகப் போற்றப்படுகிறார்கள்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும் தங்களுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தங்கள் நாட்டை உலகின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சிமிக்க நாடாக மாற்றியிருக்கிறார்கள். ஜப்பானில் தயாராகும் எலக்ட்ரானிகள் சாதனங்கள் உலகெங்கும் விரும்பி வாங்கப்படும், நீண்ட நாள்கள் உழைக்கும் கருவிகளாக இருக்கின்றன.

ஆட்சிமுறை : மன்னராட்சி மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறை.



தலைநகரம் : டோக்கியோ

மக்கள் தொகை : 12,74,63,611

ஆட்சிமொழி : ஜாப்பனீஸ்

நாணயம் : யென்

பரப்பளவு :

3,77,835 சதுர கி.மீ.

மலைகள் :

ஜாப்பனீஸ் ஆல்ப்ஸ்,

நதிகள் : பிவா, இனாவாஷிரோ, கஸூமிகாரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.