நாடுகள் அறிவோம்...: ஸ்விட்சர்லாந்து
பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நாடு. மத்திய ஐரோப்பாவில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டுக்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட பகுதி. ஆஸ்திரியா, ஜெர்மனி இதன் எல்லைப் பகுதிகளில் உள்ளன. பெரும்பாலான மக்கள்,


பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நாடு. மத்திய ஐரோப்பாவில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டுக்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட பகுதி. ஆஸ்திரியா, ஜெர்மனி இதன் எல்லைப் பகுதிகளில் உள்ளன.
பெரும்பாலான மக்கள், உயரமான ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கும் ஜூரா மலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பீடபூமியில் வசிக்கின்றனர். தென் பகுதியிலுள்ள மலைப் பகுதியில் மக்கள் வசிப்பது மிகவும் குறைவு.
ஸ்விஸ் ஆல்ப்ஸ் 4000 மீட்டர் உயரமான மலைப் பகுதிகளைக் கொண்டது. முழுவதும் பனி மூடப்பட்ட மலை. மேட்டர்ஹான் என்ற மிக உயர்ந்த சிகரம் (4,478 மீட்டர்) இம் மலைத்தொடரில் உள்ளது. ட்யூஃபோர்ஸ்பிட்ஸ் என்று இன்னொரு உயர்ந்த சிகரமும் இங்குள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இங்குள்ள ஐஸ் மலைகள் குறைந்து கொண்டே வருவது சமூக ஆர்வலர்களையும் விஞ்ஞானிகளையும் மிகவும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கருதுகின்றனர். மிக அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக் கொண்டிருப்பதால் மலையடிவார கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது வருத்தத்துக்குரிய செய்தி.
1291-ம் ஆண்டு உருவான நாடு. மூன்று மாநிலங்களை ஒன்றிணைத்து ஸ்விட்சர்லாந்தை உருவாக்கினார்கள். 1815-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 1848-ல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டங்களின்படி, ஸ்விட்சர்லாந்து ராணுவம் எந்த நாட்டுக்கும் பாதுகாப்பிற்காகவோ ஆக்கிரமிப்பு செய்வதற்காகவோ அனுப்பப்படுவதில்லை.
உலகப் போர் நடந்த சமயத்திலும் மற்ற நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களின் போதும் ஸ்விட்சர்லாந்து நடுநிலையைக் கடைப்பிடித்தே வந்திருக்கிறது. கூட்டுசேரா நாடாகவே இதுவரை இருந்து வருகிறது. 2002-ம் ஆண்டுதான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராகச் சேர்ந்தது. ஐரோப்பிய யூனியனிலும் உறுப்பினராகச் சேராமலேயே இருந்து வருகிறது.
உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்று! கைக்கடிகாரங்களுக்கும் சுவர்க் கடிகாரங்களுக்கும் மிகவும் புகழ் பெற்ற நாடு.
நாட்டுக்கென்று தேசிய மொழி எதுவும் கிடையாது. ஸ்விஸ் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் என்று நிறைய மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடு.
26 மாநிலங்களைக் கொண்ட நாடு. மாநிலங்களுக்குப் பெயர் "கேண்டன்' என்பதாகும்.
ஜனாதிபதிதான் அரசாங்கத்தின் தலைவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட கவுன்சில் ஒன்றுதான் ஜனாதிபதியையும் உதவி ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்கின்றது. இந்தப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஓர் ஆண்டுதான். நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் மாதத்தில் இங்கு தேர்தல் நடக்கும்.
உலகில் மிகச் சிறந்த முறையில் கல்வியளிக்கும் நாடுகளில் ஸ்விட்சர்லாந்தும் ஒன்று. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிகவும் அதிகம். அதனால் பெரும்பாலான குழந்தைகள் தேசியப் பள்ளிகளிலேயே கல்வி கற்கின்றனர். 11 பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ளன.
ரொட்டி மற்றும் பால் பொருள்கள்தான் மக்களின் உணவில் பெரும்பான்மை வகிக்கின்றது. பாலும் தேனும் மிகவும் பிடித்தமான உணவு. காலையில் ரொட்டி, மதியம் ரொட்டி மீண்டும் இரவிலும் ரொட்டி என்று ஏராளமான ரொட்டிவகைகளைச் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
மக்கள் தொகை: 74,46,000
தலைநகர்: பெர்ன்
பரப்பளவு: 41,282 சதுர கிலோமீட்டர்கள்.
மொழி: ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன்
மற்றும் ரோமன்ஸ்
நாணயம்: ஸ்விஸ் ஃபிராங்க்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...