பறவையைத் தொடர்வோம்...
நிறையப் பறவைகள் மேலும் கீழுமாக வாலாட்டும். ஆனால் கொடிக்கால் வாலாட்டி மட்டும் பக்கவாட்டில் வாலாட்டிக் கொண்டிருக்கும். நடுத்தர அளவுப் பறவை. 81 செ.மீ.நீளமிருக்கும்.


கொடிக்கால் வாலாட்டி
நிறையப் பறவைகள் மேலும் கீழுமாக வாலாட்டும். ஆனால் கொடிக்கால் வாலாட்டி மட்டும் பக்கவாட்டில் வாலாட்டிக் கொண்டிருக்கும். நடுத்தர அளவுப் பறவை. 81 செ.மீ.நீளமிருக்கும். மெலிதான பறவை. முதுகுப் பகுதியும் தலைப் பகுதியும் ஆலிவ் பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறகுகள் கருப்பாகவும் மஞ்சள் நிறத்தில் இரண்டு பட்டைகளைக் கொண்டிருக்கும்.
மரங்களில் கூடு கட்டி வசிக்கும் பறவை. பெரும்பாலும் காடுகளில் வசிக்கும். ஆசியாவிலும் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவிலும் அதிகம் காணப்படும். தனியாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ காணப்படும். மரங்களிலுள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும். செங்குத்தான மரக்கிளைகளிலும் மிக வேகமாக ஏறக்கூடிய பறவை.
ஒரு சமயத்தில் 5 முட்டைகளை இடும். குஞ்சுகள் 15 நாட்களில் முட்டைகளிலிருந்து வெளிவரும்.
கருப்பு வெள்ளை வாலாட்டி
இதுவும் கொடிக்கால் வாலாட்டி இனப் பறவைதான். அதே அளவுதான் இதுவும் இருக்கும். 21 செ.மீ.நீளமிருக்கும். நீண்ட எப்பொதும் ஆடிக்கொண்டிருக்கும் வாலைக் கொண்ட பறவை. மேல் பகுதி முழுவதும் கருப்பாகவும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். தலையில் மேலேயும் சிறியதாக வெண்பகுதி காணப்படும்.
நீர்நிலைகளில் காணப்படும். இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஸ்ரீலங்காவில் அதிகம் பார்க்கலாம்.
எப்போதும் ஜோடியாகத் திரியும். நீண்ட தூரம் களைப்பின்றி பறக்கக்கூடியது. அடர்ந்த புதர்களில் கூடு கட்டி வசிக்கும்.
ஒரு சமயத்தில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். கம்பளிப்பூச்சிகளையும் சிலந்திப்பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
கரும்சாம்பல் வாலாட்டி
கரும்சாம்பல் வாலாட்டி, மிகவும் சிறியதாக இருக்கும்.
உடலின் மேல் பகுதி சாம்பல் நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து காணப்படும். தொண்டைப் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். நீண்ட வாலைக் கொண்டிருக்கும்.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அதிகம் காணப்படும். நீர் நிலைகளிலும் சேறான பகுதிகளிலும் வசிக்கும். இதன் குரல் மிகவும் இனிமையாக இருக்கும்.
கட்டிடங்களிலுள்ள இடுக்குகளில் கூடு கட்டும்.
ஒரு சமயத்தில் 3 முதல் 6 முட்டைகளை இடும். முட்டைகளில் புள்ளிகள் காணப்படும்.
15 நாட்களுக்குள் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும். இந்தப் பறவையின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்.
வண்டுகள் மற்றும் நீர்ப்பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...