/

பறவையைத் தொடர்வோம்...

கருங்காடை ஆங்கிலத்தில் மழை காடை என்றழைக்கப்படுகிறது.

News image
Updated On :18 ஜனவரி 2013, 4:25 am

அபி

காடை
 காடை, கோழி இனப் பறவை. ஆனால் அளவில் மிகச் சிறியது. 17 செ.மீ. நீளமே இருக்கும். சற்றே குண்டாக இருக்கும். பழுப்பு நிறத்தில் வெள்ளைச் சிதறல்களுடன் காணப்படும். சிறகுகள் மட்டும் சற்றே நீளமாக இருக்கும்.
 தானியங்களையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும். அவ்வளவாகப் பறக்காது. ஆட்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும்.
 விவசாய நிலங்களிலும் புல்வெளிகளிலும் வசிக்கும். ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படும் பறவை.
 ஒரு சமயத்தில் 6 முதல் 12 முட்டைகள் வரை இடும். 18 நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவரும். உணவுக்காக இதை மக்கள் வேட்டையாடுவதைப் பார்த்திருப்பீர்கள்.
 
 கருங்காடை
 கருங்காடை ஆங்கிலத்தில் மழை காடை என்றழைக்கப்படுகிறது. இதுவும் புல்வெளிகளிலும் விவசாய நிலங்களிலும் வசிக்கும். வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் அதிகம் காணப்படும். கங்கைக் கரையில் இந்தப் பறவையை அதிகம் பார்க்கலாம். குளிர்காலத்தில் அதிகம் வெளிவரும். தலை கருப்பு வெள்ளை நிறங்கள் கலந்து காணப்படும். மார்புப் பகுதி சற்றே கருப்பாக இருக்கும். இதன் குரல் கீச் கீச்சென்று இருக்கும்.
 ஒரு சமயத்தில் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும். முட்டைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
 
 புதர் காடை

 புதர் காடையும் காடை இனப் பறவைதான். இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அதிகம் காணப்படும் பறவையினம்.
 வெள்ளை வரிகளுடன் பழுப்பு நிறத்தில் இருக்கும். சில பறவைகள் சிவப்பு மற்றும் வெள்ளை வரிகள் கலந்து காணப்படும்.
 பொதுவாகத் தானியங்களை விரும்பிச் சாப்பிடும். புல் விதைகளையும் பூச்சிகளையும்கூடச் சாப்பிடும்.
 5 முதல் 8 முட்டைகள் வரை ஒரு சமயத்தில் இடும். 16 முதல் 18 நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.