பறவையைத் தொடர்வோம்...
பசிபிக் பெருங்கடலிலுள்ள நியூ கினியா என்ற தீவுக்குப் போனால்தான் இந்த அழகிய பறவையைப் பார்க்க முடியும்.


விக்டோரியா க்ரவுன் புறா
சென்ற இதழ் அட்டையில் வெளியாகியிருந்த இந்தப் பறவையைப் பற்றி -
பசிபிக் பெருங்கடலிலுள்ள நியூ கினியா என்ற தீவுக்குப் போனால்தான் இந்த அழகிய பறவையைப் பார்க்க முடியும்.
அடர்நீல நிறப் பறவை. உடலில் ஆங்காங்கே சாம்பல் நிறமும் வெள்ளை நிறமும் காணப்படும். உடலின் வயிற்றுப் பகுதி மட்டும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
தலையில் கிரீடம் வைத்தது போல அழகிய கொண்டை காணப்படும். இதுதான் இந்தப் பறைவையின் அழகுக்கு அழகூட்டுகிறது. இந்த இனத்தில் ஆண், பெண் இரண்டுமே ஒரே மாதிரிதான் இருக்கும்.
73 முதல் 75 செ.மீ. நீளமிருக்கும். எடை 2 முதல் 3 கிலோ வரை இருக்கும்.
இது பறக்கும்போது கைதட்டுவது போன்ற சத்தத்தை எழுப்பும்.
ஈரமான களிமண் நிறைந்துள்ள இடங்களில் வசிக்கும் பறவை. சில பறவைகள் காடுகளிலும் கடலுக்கு அருகிலும் வசிக்கும்.
எப்போதும் ஜோடியாகத்தான் இருக்கும். இது மிகவும் கம்பீரமான நடையைக் கொண்ட பறவை. கீழே விழுந்து கிடக்கும் சிறு பழங்களை விரும்பிச் சாப்பிடும். சமயங்களில் தானியங்களையும் சிறு பூச்சிகளையும் சாப்பிடும்.
யாராவது அருகில் வந்துவிட்டால் அப்படியே மேலெழும்பிப் பறந்து உயரமான மரக்கிளைகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். வந்தவர்கள் இடத்தைவிட்டு அகன்றபிறகுதான் திரும்பவும் இரை தேட கீழே இறங்கும்.
ஈரப்பதம் மிகுந்த காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டைதான் இடும். முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும். மிகவும் கவனமாகக் கட்டிய கூடுகளில் வசிப்பதால் முட்டை பத்திரமாக இருக்கும். 30 நாட்களில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.
சிறிது நாட்களிலேயே குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியே வந்தாலும் தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் 13 வாரங்கள் வரை தொடரும்.
இந்தப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் இது அரியவகை இனமாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...