நடை வண்டி தந்த கொடையாளி!
பல்லவ மன்னன் லிங்கையன் மகனுக்குபண்புடை சோழன் நடைவண்டி அளித்தான்!நல்லபொன் நவரத்தி னங்களால் ஆன தேர்!


பல்லவ மன்னன் லிங்கையன் மகனுக்கு
பண்புடை சோழன் நடைவண்டி அளித்தான்!
நல்லபொன் நவரத்தி னங்களால் ஆன தேர்!
நாளும் அதனால் சிறுவன் விளையாடினான்!
தேர்நடை வண்டியை கண்டவர் வியந்தனர்!
சிறுவனும் அரண்மனை முன் விளை யாடினான்!
பேர்புகழ் பெற்ற பல்லவ ராயனும்
புலவர், வறியோர்க்கு வாரியே வழங்கினான்!
ஒரு பெரும் புலவர் வயதான நிலையிலே
உரிய தன் மகளுக்கே திருமணம் செய்திட
திருவளர் அரண்மனை தேடியே வந்தார்!
சீர் திகழ் மன்னவன் அயலூரி லிருந்தான்!
மன்னனைக் காணாது புலவரும் வருத்தமாய்
வந்தவழி திரும்பிய தைக்கண்ட சிறுவனும்
""ஐயா, புலவரே!... ஏன் திரும்பிப் போகிறீர்?
என்னிடம் சொல்வீர்'' என்றா னரசன் மகன்!
""வறுமையால் வாடும் நற்றமிழ்ப் புலவன் நான்
மகளுக்குத் திருமணம்,,,,பொருள் வேண்டி வந்தேன்!
வெறுமையில் திரும்பினேன்...வேறென்ன செய்வது!
மறுபடி வந்திட என் உடல் நிலை சரியில்லை...''
""ஐயா, ,பொன்னா லான சிறுதேர் இது!....
தருவேன் இதனை எடுத்துச் செல்வீர்....
விற்றிதைத் திருமணச் செலவைச் செய்வீர்!....''
என்றான் சிறுவன்!.... தயங்கினார் புலவர்!
தாயார் அரசியும் இதனைப் பார்த்தார்!
தனயன் குணத்தை வியந்தார்! புலவரை
அழைத்தார் கொடுத்தார் வண்டியை! அதனைப்
பெற்றார் நன்றிப் பெருக்குடன் புலவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...