அங்கிள் ஆன்டெனா

சூரியன் ஏன் அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்களில் மட்டும் சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கிறது?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: சூரியன் ஏன் அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்களில் மட்டும் சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கிறது?

பதில்: இதற்குக் காரணம் ஒளி முறிவினால் ஏற்படும் நிறப் பிரிகை என்பார்கள். விஞ்ஞானப் பாடத்தில் இது பற்றிப் படித்திருப்பீர்கள்.

காலையில் உதயமாகும் சூரியன் தரைப் பரப்பின் கிடைநிலைக்குச் சற்றே கீழிருக்கும் நிலையில் , மேல் நோக்கி எழும் சூரியன் காற்று மண்டலத்திற்குள் நுழைகிறது. அப்போது சூரியக் கதிர்களின் நிறம் சற்றே விலகி சமப் பரப்புக்கு வருவதால், ஒளிராத வெப்பமற்ற சிவப்பு நிற சூரியன் நமக்குத் தோன்றுகிறது.

இதே போலத்தான் மாலையிலும் இதை அப்படியே Reverse செய்து பாருங்கள். கீழே இறங்கும் சூரியன் காற்று மண்டலத்தை விட்டு விலகும்போது சூரியக் கதிரிகளின் நிறம் சற்றே விலகி சமப்பரப்புக்கு வரும். அப்போது பெரும் வெளிச்சத்தைப் பகல் முழுவதும் கொடுத்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளிராத வெப்பமற்ற சிவப்பு நிற சூரியன் நமது கண்களுக்குத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com