இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகிழ்ச்சி வரும்!

பொங்கல் வந்தால் என்ன வரும்?புத்தம்புதிய நெல்லு வரும்!நெல்லை அரைத்தால் என்ன வரும்?

News image
Updated On :9 ஜனவரி 2021, 12:30 am

DIN


பொங்கல் வந்தால் என்ன வரும்?
புத்தம்புதிய நெல்லு வரும்!
நெல்லை அரைத்தால் என்ன வரும்?
நன்றாகப் பச் சரிசி வரும்!

அரிசி பின்னால் என்ன வரும்?
அச்சுக் குலையா வெல்லம் வரும்!
வெல்லம் வந்தபின் என்ன வரும்?
வெள்ளை உள்ளத் தேங்காய் வரும்!

தேங்காய் கூட என்ன வரும்?
தித்திக்கின்ற கரும்பு வரும்!
கரும்பின் அருகில் என்ன வரும்?
கொத்தாய் இருக்கும் மஞ்சள் வரும்!

மஞ்சளை அடுத்து என்ன வரும்?
மலர்களைத் தொடுத்த கதம்பம் வரும்!
ஏலம், சுக்கு, இஞ்சி வரும்!
இவற்றை நெய், பால், மிஞ்சி வரும்!

வாழைப் பழமும் இலையும் வரும்!
வாசலில் கோலக் கலையும் வரும்!
பொங்கலோ பொங்கல் ஓசை வரும்!
பொங்கலைத் திங்க ஆசை வரும்!

மஞ்சு விரட்டுக் காளை வரும்!
மாடுகள் ஓடும் வேளை வரும்!
தை...தை... என்று மாதம் வரும்!
தமிழ்நாடெங்கும் மகிழ்ச்சி தரும்!

பொதுமைப் பித்தன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.