அழகிய தோட்டம்!
தோட்டம் ஒன்று அமைத்திடவேதிட்டம் தீட்டிடுவாய் தம்பி!பலப்பல நிறங்களில் தொட்டிகள் வாங்கி


தோட்டம் ஒன்று அமைத்திடவே
திட்டம் தீட்டிடுவாய் தம்பி!
பலப்பல நிறங்களில் தொட்டிகள் வாங்கி
பாங்குடன் மண்ணை நிரப்பிடுவாய்!
பக்குவமாக விதைகள் ஊன்றி
பரிவோடு நீரும் பாய்ச்சிடுவாய்!
பழங்கள், காய்கறிக் கழிவுகளை
உரமாய் செடிக்கு இட்டு வந்தால்
பச்சைப் பசேலெனக் கீரைகள்
பாகல், வெண்டை, காய்கறிகள்
பசுமையாய் காய்த்திடக் கண்டிடுவாய்!
பகிர்ந்தே நீயும் உண்டிடுவாய்!
வண்ண வண்ண மலர்களின் அழகை
நித்தம் நித்தம் ரசித்திடுவாய்!
தூய்மையான காற்றும் உன்னை
தூளியாய் வந்து தாலாட்டும்!
தோழர், தோழியர் அனைவரும் சேர்ந்து
தோட்டம் ஒன்றை அமைத்திடுவீர்!
தோட்டம் தரும் பலன்களை நீங்கள்
ஒன்றாய்க் கூடி அனுபவிப்பீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...