கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உடல் வளர்க்கும் கீரைகள்!

சிறுகீரை அடிக்கடி சாப்பிட்டால்சிறப்பாய் கண்கள் ஒளி வீசும்!அரைக்கீரை நாளும் சேர்த்திடுங்கள்

News image
Updated On :30 ஜனவரி 2021, 12:30 am

ச. குருசாமி


சிறுகீரை அடிக்கடி சாப்பிட்டால்
சிறப்பாய் கண்கள் ஒளி வீசும்!
அரைக்கீரை நாளும் சேர்த்திடுங்கள்
ஞாபகசக்தியைக் கூட்டிவிடும்!

அகத்திக் கீரையைச் சாப்பிடுங்கள்
அகலும் வயிற்றுப் புண்களெல்லாம்!
தண்டுக் கீரையைச் சாப்பிடுங்கள்!
தளர்ந்த உடலும் பலமாகும்!

பொன் னாங்கண்ணிக் கீரை உண்டால் 
பொன்னாய் மின்னும் மேனியுமே!
புதினாக் கீரையைச் சாப்பிடுங்கள் 
பசியைத் தூண்டி சக்தி தரும்!
வல்லாரைக் கீரையைச் சாப்பிடுங்கள்!
வளர்ச்சி காணும் மூளையுமே!
காசினிக் கீரை சாப்பிடுங்கள்!
காணாமல் போகும் பல நோய்கள்!

முடக்கறுத்தான் கீரை சாப்பிடுங்கள் 
முடக்குவாத நோய் தடுக்கும்! 
தூதுவளைக் கீரை உண்டால் 
துரத்தும் சளியை  மிக விரைவில்!

முருங்கைக் கீரை சாப்பிடுங்கள்
முறுக்கேறி உடலும் வளமாகும்!
நோய் இல்லா வாழ்வு வாழ்ந்திடவே 
நித்தம் கீரைகள் உண்பீரே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.