பணிவு!

பணிவின் அவசியத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் மார் டின் லூதர்கிங்  ஒரு கதை சொன்னார்.
பணிவு!

பணிவின் அவசியத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் மார் டின் லூதர்கிங் ஒரு கதை சொன்னார்.
இதோ அந்தக் கதை.
ஒர் ஆற்றின் மீது ஒரு மட்டும் நடந்து போகும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. அது குறுகிய பாலம். அந்தப் பாலத்தின் மீது எதிர் எதிராக இரண்டு ஆடுகள் வந்தன. அவை பாலத்தின் நடுவில் சந்தித்துக் கொண்டன. குறுகிய பாலமானதால் விலகிச் செல்ல வழியில்லை. ஒரு நேரத்தில் ஒரு ஆடுதான் செல்ல முடியும்!
பின்னோக்கிச் செல்லலாம். ஆனால் பத்திரமாகச் செல்ல வேண்டும். முட்டி மோதிக்கொண்டால் ஆற்றில் விழ நேரிடும்!
இந்த சூழ்நிலையில் ஒரு ஆடு சற்று சிந்தித்தது. பிறகு பாலத்தில் படுத்துக்கொண்டது. மற்றொரு ஆடு அதன்மீது நடந்து சென்றது. இரண்டு ஆடுகளும் பிரச்னை இல்லாமல் பாலத்தைக் கடந்தன.
ஓர் ஆடு பணிந்து போனதால்தான் இது சாத்தியமானது இல்லையா?.... எனவே விட்டுக்கொடுத்தல், பணிந்து போதல் ஆகிய குணங்களால் ஒருவருக்கு ஒருவர் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்!
ஒற்றுமையும் பணிவும், விட்டுக்கொடுத்தலும் பல நன்மைகளை அளிக்கும் என்பதை இந்தக் கதை மிக நன்றாக போதிக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com