"எதுக்குப்பா கடவுள்கிட்ட இன்னொரு தலை வேணும்னு வேண்டிக்கிறே...?''
"நான் ஒரு தலைப்பட்சமா செயல்பட்றேன்னு ஆபீசுல எல்லோரும் சொல்றாங்க... அதுக்குதான்''
"சார்... ரகு வீட்டுல இருக்கானா?''
"இருக்கான். கொஞ்சம் வெயிட் பண்ணு. வாட்ஸ் ஆப்ல "உன் ஃபிரண்டு ரவி வந்திருக்கான்னு' மெசேஜ் பண்ணிருக்கேன்... வந்துடுவான்''
"ஏன்டி மாலா... நீல மாம்பழம் வாங்கி வரச் சொன்னா... வெறும் கையோட வந்திருக்கியே?''
"மார்க்கெட் பூரா அலைஞ்சதுதான் மிச்சம் பாட்டி... அந்தக் கலர்ல மாம்பழமே இல்லையாம்!''
"உன்ன மட்டும் சார் எதுவுமே கேட்க மாட்டேங்கிறாரே... என்னடா ரவி சொக்குப்பொடி போட்ட...?''
"பொடியெல்லாம் போடலே... தினமும் பேஸ்புக்குல அவர் போடுற போஸ்டுக்கெல்லாம் "லைக்' போடுறேன்... அதான் காரணம்''
"புத்தகக் காட்சி நடக்குதாமே ரோஸி... எங்க நடக்குது?''
"அது எங்கேயும் நடக்காதுடி... அங்கேயேதான் இருக்கும். நாமதான் போகணும் ''
"நல்லா படிச்சு எக்ஸாம்ல பாஸ் பண்ற வழியப் பாரு... இல்லன்னா நடு ரோட்டுலதான் நிக்க வேண்டி வரும்!''
"அப்ப.... டிராபிக் போலீஸ்காரங்க எல்லாம் நல்லா படிக்காதவங்களாப்பா....?''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்த முயற்சி!

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

