பறவைகளின் விசித்திரத் தூக்கம்

கிவிப்பறவை (நியூஸிலாந்து) பூமிக்கடியில் காணப்படும் வளைகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.
பறவைகளின் விசித்திரத் தூக்கம்

கிவிப்பறவை (நியூஸிலாந்து) பூமிக்கடியில் காணப்படும் வளைகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.

"கிரீப்பர்' என்ற பறவை  மரப்பொந்துகளில் மல்லாந்து படுத்து தூங்கும்.

 "ஸ்வாட்' என்ற பறவை பெரிய பந்துபோல் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர்ந்தே தூங்கும்.

வாத்துகளும் அன்னங்களும் தண்ணீரில் மிதந்தபடியே தூங்கும். குளிர்நாடுகளில் இரவில் திடீரென நீர் உறைந்துவிடுவதால், அவை பனிக்கட்டிகளில் சிக்குவதும் உண்டு.

அமெரிக்காவில் உள்ள கறுப்பு வாத்துகள் நீரில் மிதந்தவாறு  தூங்கும். அப்போது, காற்றடித்தால் தூக்கத்திலேயே ஒரு காலை ஆட்டித் துடுப்புப் போட்டு காற்றானது தன்னுடைய இருப்பிடத்தைத் தள்ளிவிடாமல் பார்த்துகொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com