கொண்டாட்டம் கொண்டாட்டம் கரும்பிற்கே
கட்டுக்கட் டாய்க்காட்சி சாலையிலே!
வண்டாட்டம் வண்டாட்டம் நாங்களுமே
வட்டமிட்டுக் கரும்புகளை மொய்க்கின்றோம்!
பொங்கலோடு கரும்பினையும் படைக்கின்றார்!
பரிதிமுன்னே பூசையுமே புரிகின்றார்!
பொங்குதாசை கரும்புருசி பார்த்திடவே
போட்டி போட்டுத் துண்டுகளாய்ப் போடுகின்றோம்!
துண்டுகளைக் கடிக்கின்ற போதினிலே
தேனை மிஞ்சும் இனிய சாறும் நாவினிலே!
உண்டுபார்க்குக அடிக்கரும்புத் துண்டில்தான்
என்ன சுவை! என்ன ருசி! அற்புதமே!
நமது வாழ்வும் கரும்புபோல இனிக்க வேண்டும்!
நல்லவற்றைக் கற்று நாளும் பழக வேண்டும்!
நமது செயல் கற்றவழி நடக்க வேண்டும்!
நிலத்தினிலே இனிய புகழ் நாட வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.