மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தெரியுமா?

இந்தியாவைச் சேர்ந்த பதினான்கே வயதான ஆர்யன் சுக்லா நான்கு இலக்க எண்கள் நூறை 30.9 விநாடிகளில் கூட்டி சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :26 ஜூலை 2026, 4:00 am IST

கணிதத்தில் சூரன்

இந்தியாவைச் சேர்ந்த பதினான்கே வயதான ஆர்யன் சுக்லா நான்கு இலக்க எண்கள் நூறை 30.9 விநாடிகளில் கூட்டி சாதனை படைத்துள்ளார். ஒரே நாளில் இதுவரை இருந்த ஆறு கணித சம்பந்தமான சாதனைகளை இவர் முறியடித்திருப்பது உலகினரை வியக்க வைத்திருக்கிறது.

Story image

கடலைச் சுத்தமாக்கும் பாயன்ஸ்லாட்

நெதர்லாந்தைச் சேர்ந்த பதினெட்டே வயதான இளைஞரான பாயன்ஸ்லாட் கடல் நீரில் சேர்ந்துள்ள அசுத்தங்களை அகற்றி நீரைச்சுத்தமாக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தனது நவீன அமைப்பினால் அகற்றுவதே பாயன்ஸ்லாட்டின் நோக்கம்.

2040-ஆம் ஆண்டு உலகில் உள்ள கடல் கழிவுகளில் 90 சதவிகிதம் அகற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடும் இந்த இளைஞர் 28000 கிலோ கிராம் கழிவை பசிபிக் கடலிலிருந்து இதுவரை அகற்றியுள்ளார். இளைஞர்களுக்கு முன் மாதிரியாக உள்ள பாயன்ஸ்லாட்டை உலகமே பாராட்டுகிறது.

Story image

நீளமான நாக்கு!

அமெரிக்காவைச் சேர்ந்த சனல்டாப்பர் என்ற பெண் தான் உலகில் நீளமான நாக்கு கொண்டவராக சாதனை படைத்துள்ளார். இவரது நாக்கின் நீளம் 9.75 சென்டிமீட்டர். இதுவரை இவரைத் தோற்கடிக்க யாரும் முன்வரவில்லை.

Story image

ஏழைகளுக்கு உதவும் ஜகில்ஜாக்ஸன்

சிகாகோவின் தென்பகுதியில் வாழும் பதினேழே வயதான ஜகில்ஜாக்ஸன் தன் அத்தையுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். ஆசிர்வாதப் பைகள் எனப்படும் 'ப்ளெஸ்ஸிங்பேக்' கைத் தயார் செய்து, உலகில் எட்டு வயதே ஆன ஆதரவற்ற குழந்தைகளுக்கு விநியோகித்து வருகிறார்.

இந்தப் பையில் சோப், டூத்பிரஷ், பேஸ்ட், சாக்ஸ் உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன. ஜாக்ஸனை முன்னாள் அமெரிக்க அதிபரான பாரக்ஒபாமா பாராட்டியுள்ளார். ஆங்காங்கே உணர்ச்சியூட்டும் உரைகளை ஆற்றி பலரையும் தனது சேவையில் இணைத்து வருகிறான் ஜாக்ஸன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.