அனகோண்டா வேக வீரர்கள்!
13ஆண்டுகளாக திறமை வாய்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்களை உருவாக்கி வருகிறது சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்திலுள்ள ரான்சா கிளப். திறமையுள்ள டேபிள் டென்னிஸ் வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான அ


13 ஆண்டுகளாக திறமை வாய்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்களை உருவாக்கி வருகிறது சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்திலுள்ள ரான்சா கிளப். திறமையுள்ள டேபிள் டென்னிஸ் வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகள், தொழில்நுட்ப பயிற்சிகளை அளித்து அவர்களை தேசிய வீரர்களாக உருவாக்குவதில் தனித்துவம் பெற்றுள்ளது இந்த ரான்சா கிளப். பயிற்சி குறித்து ரான்சா கிளப் தலைமைப் பயிற்சியாளர் ரவி வெங்கடேஷைச் சந்தித்துப் பேசினோம். அவர் அளித்த பேட்டி:
ரான்சா கிளப் துவங்கியது எப்படி?
÷நானும் ஒரு டேபிள் டென்னிஸ் வீரர்தான். 20 ஆண்டுகளாக தமிழக, தேசிய அணிக்காக டேபிள் டென்னிஸ் விளையாடினேன். 1996-ல் டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்றேன். 1997-ல் இந்த கிளப்பை நண்பர்கள் உதவியுடன் துவக்கினேன். தற்போது கிளப்பில் டேபிள் டென்னிஸ் தலைமைப் பயிற்சியாளராக உள்ளேன்.
÷13 ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள குழந்தைகளுக்கு நல்லதொரு டேபிள் டென்னிஸ் களம் இங்கு இல்லை. எனவே எங்களுக்கு இந்த ஐடியா வந்தது. தற்போது என்னுடன் சேர்த்து 7 பயிற்சியாளர்கள் உள்ளனர்.
ரான்சா கிளப் பெயர் காரணம் மற்றும் அதில் உள்ள வசதிகள்?
ராஜா அண்ணாமலைபுரத்தில் ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீநிவாசா அவென்யூவில் இந்த கிளப் அமைந்துள்ளது. ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீநிவாசா அவென்யூ ஆகிய சொற்களின் முதல் எழுத்தை எடுத்து ரான்சா என்று பெயர் வைத்துவிட்டோம்.
ரான்சா கிளப்பில் 3 டேபிள் டென்னிஸ் போர்டுகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கு டென்னிஸ் பயிற்சியும் நடைபெறுகிறது. 3 டென்னிஸ் கோர்ட்டுகள் உள்ளன.
டென்னிஸ் பயிற்சி நடந்தாலும் டேபிள் டென்னிஸýக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். இங்கு போதிய இடவசதி இல்லாததால் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 6 டேபிள் டென்னிஸ் போர்டுகளை அமைத்து பயிற்சி அளித்து வருகிறோம்.
எந்த வயதில் டேபிள் டென்னிஸ் பயிற்சியைத் துவங்கலாம்?
டேபிள் டென்னிஸ் பயிற்சி துவங்க சரியான வயது 6. இந்த வயதில் துவங்கும்போது 15 வயதில் அந்தச் சிறுவனோ, சிறுமியோ தேசிய அளவில் முன்னேற வாய்ப்புள்ளது. ரான்சா கிளப்பில் 6 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.
டேபிள் டென்னிஸில் உள்ள டெக்னிக் சமாச்சாரங்கள் என்ன?
டேபிள் டென்னிஸில் ஸ்பீட்தான் முக்கியம். சிறிய மட்டையை வைத்துக் கொண்டு பந்தை படுவேகமாக அடிப்பது என்பது பயிற்சியின் மூலம்தான் வரும். அனகோண்டா வேகம்போல மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை அடிக்கக்கூடிய வீரர்கள் டேபிள் டென்னிஸ் அரங்கில் உள்ளனர்.
÷அது மட்டுமல்லாமல் கண் மற்றும் கை கட்டுப்பாடு மூலம் பந்தை நினைத்த இடத்துக்குச் செலுத்த முடியும். இதற்கான பயிற்சிகளை நாங்கள் அளிக்கிறோம். மேலும் பந்தை ஸ்பின் செய்யவும் முடியும். பந்தை ஸ்பின் செய்வதால் எதிராளியைத் திணறடிக்க முடியும். இதுபோன்ற ஆட்ட நுணுக்கங்களை எங்களிடம் பயிலும் வீரர், வீராங்கனைகளுக்குச் சொல்லித் தருகிறோம்.|
உங்கள் கிளப்பிலிருந்து தேசிய அணியில் இடம்பிடித்த வீரர், வீராங்கனைகள்?
ஏராளமானோர் இந்த கிளப்பிலிருந்து தமிழக அணிக்கும், இந்திய அணிக்கும் சென்றுள்ளனர். 2008-ம் ஆண்டில் ஸ்மனா என்ற சிறுமி இந்தியாவுக்காக விளையாடினார். அவர் யுஎஸ் ஓபன் டேபிள் டென்னிஸில் வெண்கலமும், இந்தியன் ஓபனில் தங்கமும் வென்றார். 2009-ம் ஆண்டில் கிளப்பைச் சேர்ந்த சுஷ்மித் ஸ்ரீராம் இந்தியத் தரவரிசையில் 4-ம் இடத்துக்குச் சென்றார்.
ஜெர்மனி, பிரான்ஸ் ஓபன் போட்டிகளில் தர வரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களை வீழ்த்தினார். சமீபத்தில் நடந்த தென் மண்டலப் போட்டியில் ஜூனியர் சிறுமியர் பிரிவில் ரான்சா கிளப்பின் ரீத் ரிஷ்யா என்பவர் அகில இந்திய அளவில் வெற்றி கண்டார்.
ரான்சாவின் எதிர்காலத் திட்டம்?
ரான்சா கிளப் வீரர்களை அதிக அளவிலான போட்டியில் விளையாட வைக்கவேண்டும். வெளியூர், வெளிமாநிலங்களுக்குச் சென்று விளையாடும்போது வீரர்களுக்கு ஆகும் செலவில் பாதியளவை ஏற்க கிளப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் ஹென்மேன் மில்லர் பில்ட்கிராப்ட் நிறுவனத்துடன் ரான்சா கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள் ஏற்கெனவே கிளப்புக்குத் தேவையான டேபிள் டென்னிஸ் கிட்களை ஸ்பான்ஸர் செய்து வந்தனர். இந்த நிலையில் வெளிமாநிலங்களில் வீரர்கள் சென்று விளையாடும்போது ஆகும் செலவில் பாதியளவை ஏற்கவும் ஹென்மேன் மில்லர் முடிவு செய்துள்ளது.÷தொடர்ந்து நாட்டுக்காக திறமைமிக்க வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...