இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாலிபால் தவம்!

ராய்ப்பூரில் 2006-ம் ஆண்டு தேசிய சப்-ஜூனியர் மகளிர் வாலிபால் இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வீராங்கனைகள் சுழன்று சுழன்று எதிரணி வீராங்கனைகளின் தாக்குதல்களைச் சமாளிக்கின்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:26 pm

வா.சங்கர்

ராய்ப்பூரில் 2006-ம் ஆண்டு தேசிய சப்-ஜூனியர் மகளிர் வாலிபால் இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வீராங்கனைகள் சுழன்று சுழன்று எதிரணி வீராங்கனைகளின் தாக்குதல்களைச் சமாளிக்கின்றனர்.

தமிழக இளம் வீராங்கனை ஒருவரின் அபார ஆட்டத்தால் தமிழகம் வெற்றி பெற, தேசிய சாம்பியன் பட்டம் தமிழகத்தின் வசமாகிறது. ரசிகர்களும், பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் ஓடிவந்து அந்த இளம் வீராங்கனைக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். அவர் மகாலட்சுமி. இந்திய வாலிபால் மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.

இனி அவருடன் பேசியதிலிருந்து.....

எந்த வயது முதல் வாலிபால் விளையாடத் துவங்கினீர்கள்?

இளம் வயது முதலே வாலிபால் மீது தீவிரமான காதல். எனக்கு வாலிபால் விளையாட்டு ஒரு தவம் என்றே சொல்லலாம். 6-வது படிக்கும்போது பள்ளியில் வாலிபால் விளையாட்டில் பழகினேன். அதன் பின்னர் தொடர்ந்து வாலிபால் பயிற்சியில் ஈடுபட்டு என்னை மெருகேற்றிக் கொண்டேன்.

பயிற்சி நேரம்?

காலை, மாலையில் இருவேளையில் நீண்ட நேரம் பயிற்சி செய்வேன். வாலிபால் விளையாடுவதற்கு உடல் நல்லமுறையில் ஒத்துழைக்கவேண்டும். அதற்காக போதிய உடற்பயிற்சியும் செய்கிறேன். சுமார் 6 மணி நேரம் வாலிபால் பயிற்சி செய்வேன்.

இதுவரை பங்கேற்று வெற்றி வாகை சூடிய முக்கியமான போட்டிகள்?

தேசிய சப்-ஜூனியர், சீனியர், சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். இதில் சப்-ஜூனியர் போட்டியில் தமிழகம் முதலிடம் பிடித்தது. எனக்கு மிகவும் பிடித்த போட்டியாகும் அது. அந்த அணியில் நானும் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

2008-ல் நடந்த தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் தமிழகம் 3-வது இடம் பிடித்தது.

தேசிய ஜூனியர் போட்டியில் முதலிடம் பிடித்தோம்.

அதைத் தொடர்ந்து 2008-ல் சீன தைபே நாட்டில் நடந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு விளையாடினேன். இதில் சர்வதேச அணிகளின் போட்டியால் நமது இந்திய அணியால் 10-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனாலும் எங்களது அணியின் ஆட்டத்தைப் பார்த்த வெளிநாட்டு வீராங்கனைகள், ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதுவே ஏராளமான விருதுகள், பரிசுகள், கோப்பைகளை வென்றதற்குச் சமமாக இருந்தது.

வாலிபாலில் உங்களுடைய முன்மாதிரி வீராங்கனை யார்?

எனக்கு சர்வதேச வாலிபால் வீராங்கனைகள் அனைவரையும் பிடிக்கும். இந்தியாவில் ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷனில் பயிற்சி பெற்று சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக உயர்ந்துள்ள காயத்ரியை மிகவும் பிடிக்கும். அவரை என்னுடைய முன்மாதிரியாகக் கொண்டுள்ளேன். அவரைப் போலவே புகழ்பெற எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்வப்போது என்னைத் தொடர்புகொண்டு வாலிபால் டிப்ஸ்களை அளிப்பார் காயத்ரி.

உங்களுக்கு உத்வேகமாக இருப்பது யார்?

என்னுடைய பயிற்சியாளர் கரீம், நான் பயிலும் எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாந்த், ஆசிரியர்கள் வரமஹாலட்சுமி, கந்தம்மாள் ஆகியோர் எனக்கு அதிக உற்சாகம் அளித்து என்னை வழிநடத்தி வருகின்றனர்.

எனது பெற்றோர் மயில்சாமி, செல்வி ஆகியோர் சிறுவயதில் எனக்கு அளித்த ஊக்கம்தான் நான் வாலிபால் விளையாடக் காரணமாக அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன் நிர்வாகிகள் வீரமணி, முகமது ஜின்னா ஆகியோரும் என்னுடைய பயிற்சிக்கு உத்வேகமாக உள்ளனர். வாலிபால் விளையாட்டின் நுணுக்கங்களைச் சொல்லித் தந்துள்ளனர். வெளிமாநிலம், வெளிநாடு சென்று விளையாடுவதற்கும் உதவி வருகின்றனர்.

தற்போது படித்து வருவது...?

சென்னை எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறேன். விளையாட்டு நேரம் போக படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு என்னுடைய உடற்கல்வி ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உதவியாக இருக்கின்றனர். நான் படிப்பதற்குத் தேவையான குறிப்புகள், புத்தகங்களைக் கொண்டு கல்வியிலும் நான் மிளிர்வதற்கு உதவி செய்கின்றனர். அவர்களுடைய உதவியை நான் என்றும் மறக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.