இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீச்சல்தான் உயிர்மூச்சு!

  நீச்சல் பழகத் துவங்கிய ஒரே ஆண்டில் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வாங்கிக் குவித்து அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்துள்ள மாநில நீச்சல் வீராங்கனை ஆர். சுரேகா. மாநில அளவிலான போட்டிகள், நீச்ச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:55 pm

வா.சங்கர்

  நீ ச்சல் பழகத் துவங்கிய ஒரே ஆண்டில் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வாங்கிக் குவித்து அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்துள்ள மாநில நீச்சல் வீராங்கனை ஆர். சுரேகா. மாநில அளவிலான போட்டிகள், நீச்சல் கிளப்புகளுக்கு இடையிலான போட்டிகள், சென்னை மாவட்டப் போட்டி எனப் பல போட்டிகளில் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்கியுள்ளார் சுரேகா. தேசியப் போட்டிகளுக்காகத் தயாராகும் முனைப்பில் சென்னை மெரீனாவிலுள்ள அண்ணா நீச்சல் குளத்தில் மும்முரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரிடம் பேசியதிலிருந்து....

 நீங்கள் எந்த வயது முதல் நீச்சல் கற்றுக் கொண்டு வருகிறீர்கள்?

 2010-ம் ஆண்டில்தான் நீச்சல் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். ஆறு மாத காலத்திலேயே நீச்சலைக் கற்றுக் கொண்டு போட்டிகளில் பங்கேற்கத் துவங்கிவிட்டேன்.

 நீச்சல் பழக ஆர்வம் வந்தது எப்படி...?

 எனது தந்தை ஜி. ரவிச்சந்திரனும், தாய் சசிதேவியும் இதற்குக் காரணம். தந்தைதான் என்னை நீச்சல் கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். அவருடைய ஆர்வத்தின் பேரில் நீச்சல் கற்றுக் கொள்ளத் துவங்கினாலும் நீச்சல் மீது எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. நீச்சல் பழகுவதால் உடலும், உள்ளமும் உற்சாகமடைகிறது. நீச்சல் பழகினால் நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நான் நீச்சல் பழக அதுவும் ஒரு காரணம் ஆகும்.

 எந்தெந்த வகையான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம்....?

 பிரெஸ்ட் ஸ்டிரோக், ஃப்ரீஸ்டைல், ஃபிளை, பேக் ஸ்டிரோக் எனப் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க ஆர்வம். இப்போதைக்கு என்னுடைய பயிற்சியாளர் மோகனின் வழிகாட்டுதலின்பேரில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.

 உங்களுடைய பயிற்சி நேரம்...?

 காலையில் 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் வீடு திருவொற்றியூரில் உள்ளது. ஆனாலும் எனது தந்தை என்னைப் பயிற்சிக்காக தினமும் அழைத்து வந்துவிடுவார். விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் பயிற்சி மேற்கொள்வேன்.

 பெற்ற வெற்றிகள்....?

 ஒசூரில் நடைபெற்ற மாநில அழைப்புப் போட்டியில் 100 மீட்டர் ஃபிளை, 100 மீட்டர் பேக்ஸ்டிரோக், 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று மூன்று வெள்ளிப் பதக்கங்கள் வென்றேன். மேலும், 50 மீட்டர் ஃபிளை பிரிவில் வெண்கலத்தைக் கைப்பற்றினேன். இவை தவிர, டால்பின் நீச்சல் கிளப் நடத்திய மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் ஃபிளை பிரிவில் வெண்கலம் வென்றுள்ளேன்.

 வேலம்மாள் பள்ளி நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறேன்.

 சென்னையில் சமீபத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றேன்.

 நீச்சல் ஓ.கே...படிப்பில் எப்படி....?

 நீச்சல் போலவே எனக்கு படிப்பும் முக்கியமானது. திருவொற்றியூரிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எப்படியும் 70 சதவீதத்துக்கும் மேலான மதிப்பெண்களைப் பெற்று விடுவேன்.

 நீச்சல் தவிர மற்ற விளையாட்டுகளில் எவை உங்களுக்குப் பிடிக்கும்?

 நீச்சல் பழகுவதற்கு முன் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். தடகளத்தில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

 விளையாட்டு வீரர்களில் யார் உங்களுக்கு முன்மாதிரி...?

 பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை நிஷா மில்லத், கிரிக்கெட்டில் சச்சின் ஆகியோரை மிகவும் பிடிக்கும்.

 நீச்சலில் உங்களது லட்சியம்....?

 இப்போது மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். விரைவில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்லவேண்டும். இதன்மூலம் சர்வதேச நீச்சல் வீராங்கனையாக உருவாக வேண்டும். இதற்காக, தீவிரப் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். விரைவில் இந்த லட்சியத்தை நான் நிச்சயம் அடைவேன்.

 படங்கள்: சிவக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.