இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாடகை வீடு... வாடகை ஆட்டோ... கபடி சாம்பியன்!

சென்னை காயிதே மில்லத் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணிக்கு உற்சாகமாக கல்லூரி மகளிர் கபடி அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். "கபடி கபடி' என்று சீரான இடைவெளியில் உச்சரித்துக் க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:45 pm

வா.சங்கர்

சென்னை காயிதே மில்லத் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணிக்கு உற்சாகமாக கல்லூரி மகளிர் கபடி அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். "கபடி கபடி' என்று சீரான இடைவெளியில் உச்சரித்துக் கொண்டு ரைடிங் செல்கிறார் இளம் வீராங்கனை கே. பிரியா. இவர் மாவட்ட அளவிலிருந்து மிக விரைவில் தேசிய கபடிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றவர். இதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?.. இவரது தந்தை காளிதாஸ். ஆட்டோ டிரைவர். தாய் கிருஷ்ணவேணி. வீட்டு வேலை செய்து வருகிறார். இருவரும் மகளின் கபடி ஆர்வத்தைப் பார்த்துவிட்டு கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் போட்டிகளில் பங்கேற்க உற்சாகப்படுத்தி வருகின்றனர். மைதானத்தில் பயிற்சி முடிந்த பின்னர் நம்முடன் பேசினார்:

""நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில்தான் வளர்ந்தேன். எங்க குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோது என்னைப் படிக்கவைத்தனர். சென்னை சூளைமேட்டில்தான் எங்களது வீடு உள்ளது. சூளைமேட்டிலுள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில்தான் நான் படித்தேன்.

9-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கபடிப் பயிற்சி நடந்தது. அப்போது முதல் கபடி விளையாடவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேலும் எனது தந்தை காளிதாஸýம் சிறந்த கபடி வீரர். பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு யாரும் உற்சாகம் அளிக்கவில்லை. போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் அப்போது அவருக்குப் போதிய நிதியுதவி கிடைக்கவில்லை.

இதனால் அவர் தனது கபடிப் போட்டிக் கனவை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டார். எனக்கு கபடி மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர் நான் கபடியில் புகழ்பெறவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நான் செய்ய நினைத்தை எனது மகள் செய்யவேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பார்.

9-ம் வகுப்பு படிக்கும்போது கபடிப் பயிற்சியில் சேரப் போகிறேன் என்று சொன்னதும் அப்பா மிகுந்த உற்சாகம் அளித்தார். பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் கொடுத்த உற்சாகத்தால் தொடர்ந்து கபடியில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முதலில் பிடிபடாமல் இருந்த கபடி உத்திகள் பின்னர் எனக்கு கைவசமாயின. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடந்த கபடி போட்டிகளில் பங்கேற்றேன். பள்ளியின் சார்பாக வெளியில் சென்றும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றேன்.

அதன் பிறகு கடந்த ஆண்டுதான் காயிதே மில்லத் கல்லூரியில் பி.எஸ்சி

(ஜுவாலஜி)யில் சேர்ந்தேன். அப்போதுதான் இங்கு எனக்கு கபடி பயிற்சியாளர் ரவி அறிமுகமானார். பல்வேறு கபடி போட்டி நுட்பங்களை அவரிடமிருந்து கற்றேன். அதன் பிறகு ஏராளமான மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன்.

2011-ல் சேலத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் முதலிடம், அதே ஆண்டில் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 2-ம் இடம், 2010-ல் ராஜபாளையத்தில் நடந்த மாநில ஜூனியர் கபடி போட்டியில் 3-ம் இடத்தை காயிதே மில்லத் அணிக்காக விளையாடி வென்றோம்.

சென்னை வில்லிவாக்கத்தில் 2010-ல் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம், ராமநாதபுரத்தில் 2011-ல் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 2010-ல் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 3-ம் இடம் பிடித்தோம்.

இப்போது 2011-ம் ஆண்டு இறுதியில் பல்கலைக்கழக பி மண்டல போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளோம்.

கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது 2-ம் ஆண்டு துவங்கியுள்ளோம். இந்த ஆண்டில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக காலையில் இரண்டரை மணி நேரம், மாலையில் இரண்டரை மணி நேரம் பயிற்சி பெற்று வருகிறோம்.

மாநில போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்ததால், தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற தேசிய கபடி பயிற்சி முகாமில் பங்கேற்றேன்.

அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற தேசிய போட்டியில் விளையாடினோம். தேசிய போட்டி மிகவும் கடினமாக இருந்தபோதும், குஜராத், ஜம்மு-காஷ்மீர், ஒரிசா அணிகளை வீழ்த்தி கால் இறுதி வரை முன்னேறினோம். ஆனால் கால் இறுதியில் மகாராஷ்டிரம் அணியிடம் தோற்றுவிட்டோம்.

இப்போது தமிழக அணிக்காகவும், காயிதே மில்லத் அணிக்காகவும் கபடி விளையாடி வருகிறேன். கபடி பயிற்சியாளர் ரவி, கல்லூரி முதல்வர் காந்திமதி, உடற்கல்வி இயக்குநர் பத்மா சாம்சன் ஆகியோர் எனக்கு அதிக ஊக்கம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போது என்னை அழைத்துப் பாராட்டுவார் முதல்வர் காந்திமதி.

கடுமையான பயிற்சி, விடா முயற்சி, திட்டமிட்ட இலக்கு ஆகியவற்றால் தேசியப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வேன்.

நான் கபடி விளையாடி தேசிய அளவில் புகழ்பெறவேண்டும் என்பதுதான் எனது தந்தையின் ஆசை. நான் கபடி போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்கும்போது அளவிலா சந்தோஷம் அடைவார். அதுபற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வரும்போது வீடு வீடாக எடுத்துச் சென்று எனது மகள் சாதித்துவிட்டாள் என்று புளங்காகிதமடைவார். ஆட்டோ ஸ்டேண்ட் நண்பர்களிடம் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருப்பார்.

வாடகை வீடு, வாடகை ஆட்டோ, எனக்குக் கீழே தம்பி, தங்கை, அவர்களது படிப்பு செலவுகள், வீட்டு செலவுகள் இத்தனை கஷ்டத்துக்கு இடையேயும் எனது கபடி ஆர்வத்துக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பவர் எனது தந்தை. அவரது ஒரே கனவு நான் எப்படியாவது தேசிய அளவில் புகழ்பெற்ற கபடி வீராங்கனை ஆகவேண்டும் என்பதே. அதை நிச்சயம் சாதித்துக் காட்டுவேன்'' என்கிறார் உறுதியுடன் பிரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.