இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மம்தா... ப்ரியா... புவனேஸ்வரி!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து கபடி ஆசையில் புறப்பட்டு இன்று தேசிய போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உருவாகியிருக்கிறார் தமிழக வீராங்கனை புவனேஸ்வரி. 17 வயதாகும் புவனேஸ்வரி தேச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm

வா.சங்கர்

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து கபடி ஆசையில் புறப்பட்டு இன்று தேசிய போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உருவாகியிருக்கிறார் தமிழக வீராங்கனை புவனேஸ்வரி.

17 வயதாகும் புவனேஸ்வரி தேசியப் போட்டிகளில் பங்கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார். சமீபத்தில் குஜராத் மாநிலம் வடோதராவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கபடிப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று அணிக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கபடி மீதான ஆசையால் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுதல்களையும், அன்பையும் பெற்றுள்ளார் புவனேஸ்வரி. தேசிய ஜூனியர் கபடிப் போட்டியில் விளையாடியதற்காக சிறந்த வீராங்கனை விருதையும் வென்றுள்ளார். பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வரும் புவனேஸ்வரி படிப்பிலும் கெட்டிதான். கபடியில் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் புவனேஸ்வரியை சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் சந்தித்தபோது....

""நான் பிறந்தது விவசாயக் குடும்பத்தில்தான். அப்பா நல்லசாமி, தாயார் அமுதா இருவருமே விவசாயக் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அப்பா நல்லசாமியும் தேசிய அளவில் விளையாடிய கபடி வீரர். அவர் கபடி விளையாடுவதைப் பார்த்துதான் நானும் கபடியில் இறங்கினேன். எனக்குள் இருந்த கபடி ஆசையை அவர் தூண்டி விட்டார். அவரின் வழிகாட்டுதலுடன் இன்று நானும் தேசிய கபடி வீராங்கனையாகிவிட்டேன்.

பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதற்கு முன்னதாக பல்வேறு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். 12-ம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று பள்ளி அணி சார்பில் தங்கம்

வென்றோம்.

இமாசலப் பிரதேசத்தில் 2010-ல் நடைபெற்ற தேசியப் பள்ளிகள் கபடிப் போட்டியில் தங்கம் வென்றோம்.

அதன் பின்னர் கல்லூரியில் சேர்ந்தேன். இதையடுத்து இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) நடத்திய கபடி பயிற்சிகள் முகாமில் எனக்கு இடம் கிடைத்தது. அப்போது சாய் அணி சார்பில் பங்கேற்று அகில இந்திய கபடிப் போட்டியில் 3-ம் இடம் பிடித்தோம்.

2011-ல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியில் 3-வது இடத்தைக் கைப்பற்றினோம்.

கடந்த ஆண்டு பல்கலைக்கழகங்கள் இடையிலான தென் மண்டல கபடிப் போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணிக்காக விளையாடி வெள்ளி வென்றோம். அகில இந்திய லீக் கபடிப் போட்டியில் எஸ்ஐஇடி கல்லூரி அணிக்காக விளையாடி பதக்கத்தைக் கைப்பற்றினோம்.

சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கபடி போட்டி மறக்க முடியாத போட்டியாகிவிட்டது. ஏராளமான வலுவான அணிகளுடன் மோதினோம். இது மிகவும் சவாலாக இருந்தது. கபடிப் போட்டியே சவாலானதுதான். ஆனால் சவாலைச் சமாளித்து அரை இறுதி வரை முன்னேறினோம். ஆனால் அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இருப்பினும் இந்தப் போட்டியில் விளையாடிய தமிழக வீராங்கனைகள் அனைவருக்குமே இது நிச்சயம் மிகப்பெரிய அனுபவத்தைக்

கொடுத்தது.

கபடி விளையாட்டில் நான் ரைடராகச் செல்வேன். அதாவது கபடி... கபடி... என பாடிச் செல்வது. அது தவிர, எதிரணி வீராங்கனையை மடக்கிப் பிடிப்பதையும் லாகவமாகச் செய்வேன்.

பள்ளியில் படிப்பதற்கு முன்னர் எனது தந்தைதான் பயிற்சியாளர். அதன் பின்னர் பள்ளி விளையாட்டு ஆசிரியை. இப்போது கல்லூரி விளையாட்டு பயிற்சியாளரிடம் கபடி நுணுக்கங்களை பயின்று வருகிறேன். அதுமட்டுமல்லாமல் சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் எம். ராஜேந்திரனிடமும் பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கபடி நுணுக்கங்களைப் பயின்று வருகிறேன். வெற்றியானாலும் சரி. தோல்வியானாலும் அவர் அதிக ஊக்கம் அளிப்பார்.

இப்போது குயின் மேரீஸ் அணி, தமிழக அணி, சென்னை மாவட்ட அணி, கபடி ஸ்டார் கிளப் அணி, சென்னை பல்கலைக்கழக அணிகளுக்காக ஆடி வருகிறேன். குயின் மேரிஸ் கல்லூரியில் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி மேற்கொள்வேன். விடுமுறை காலங்களில் பகல் முழுவதும் பயிற்சி இருக்கும்.

இப்போது இந்திய அணியில் விளையாடி வரும் வீராங்கனை மம்தாவின் ஆட்டம் மிகவும் பிடிக்கும். அதைப் போலவே தமிழக வீராங்கனை பிரியாவின் ஆட்டமும் மிகவும் பிடிக்கும். அவர்களைப் பின்பற்றி நான் விளையாடி வருகிறேன். கடுமையாக உழைத்து இந்திய அணியில் இடம்பிடிக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி சார்பில் சர்வதேச கபடி போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.