சபரிமலை புகழ்பெறக் காரணமானவர்

இன்று நாடெங்கும் புகழ் பெற்றிருக்கும் ஐயப்பன் கோவிலை உலகுக்கு அறிய செய்தவர் நாடக மேதை நவாப் ராஜமாணிக்கம்.
சபரிமலை புகழ்பெறக் காரணமானவர்
Updated on
2 min read

இன்று நாடெங்கும் புகழ் பெற்றிருக்கும் ஐயப்பன் கோவிலை உலகுக்கு அறிய செய்தவர் நாடக மேதை நவாப் ராஜமாணிக்கம். இவரின் நாடகம் அடிக்கடி திருத்துறைப்பூண்டியில் நடக்கும். ஆரம்பம் முதலே இந்த ஊரில் இருந்துதான் ஐயப்பன் கோயிலுக்கு அதிகம் பேர் சென்றனர். ஐயப்பனை தனது நாடகம் மூலம் பரப்பியவர் நவாப் ராஜமாணிக்கம்.
 ஆதாரம்: "அருமையான ஆன்மிக விஷயங்கள்'
 தாடிக்கு லைசென்ஸ்
 ருமேனியா நாட்டில் யாரும் தாடி வைத்துக் கொள்ளக்கூடாது என்பது சட்டம். அப்படி வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் அந்த அரசாங்கத்திடமிருந்து லைசென்ஸ் பெற வேண்டுமாம். அப்படி லைசென்ஸ் பெறாமல் தாடி வளர்ப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
 அடே ராவணா!
 நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும். நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
 நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,""அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா'' எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
 இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
 இப்படியும் ஒரு முதல்வர்!
 சென்னை அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் அவர். ஒருநாள் முதலமைச்சர் வீட்டிலிருந்து அவருக்கு அவசர அழைப்பு வந்தது. முதலமைச்சருக்கு திடீர் நெஞ்சு வலி. டாக்டர் விரைந்தார்.
 முதலமைச்சரை பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது முதல்வரின் உதவியாளர் டாக்டரிடம் வந்து ஓர் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டி அதில் கையெழுத்திடும்படி கூறினார். அந்த ஒப்பந்தத்தை படித்த டாக்டருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர ஏற்பட்டன.
 அந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான்:
 ""டாக்டர் நீங்கள் எனக்கு சிகிச்சை அளித்த பின்னால், நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ எந்த சூழ்நிலையிலும் என்னிடம் எதற்காகவும் சிபாரிசு கேட்டு வரக்கூடாது. "வரமாட்டோம்' என்று ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாக இங்கே கையெழுத்திடவும்!''
 அந்த முதல்வர் பெயர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய அந்த டாக்டரின் பெயர் ரத்னவேல் சுப்ரமணியம்.
 அமெரிக்க டாலர்
 அமெரிக்க நாட்டின் நாணயத்தின் பெயர் "டாலர்' என்பதாகும். டாலர் என்றால் பள்ளத்தாக்கு என்று பொருள். பதினாறாம் நூற்றாண்டில் வழங்கிய ஜெர்மன் நாணயத்துக்குத் "தெவை' என்று பெயர். அம்மொழியில் இதற்கு பள்ளத்தாக்கு என்று அர்த்தம். பொஹிமியாவிலுள்ள ஜோக்சம் பள்ளத்தாக்கில் இந்த நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. அதனால் "தேலெர்' எனப்பட்டன. அதுதான் சற்று உருமாறி "டாலர்' எனப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com