மேற்கு வங்கத்துக்கு உள்பட்ட சிலிகுரியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான மிண்ட்டுவுக்கு டைட்டானிக் கப்பல் வடிவத்தில் வீட்டை கட்டவேண்டும் என்பது கனவு. இதன்படி, 13 ஆண்டுகள் செலவழித்து கட்டியும் முடித்து விட்டார்.
ஒரே மூச்சில் டைட்டானிக் வீட்டைக் கட்டி முடிக்கும் பொருளாதார வசதி மிண்ட்டுவிடம் இல்லை. அதனால் சிறிது, சிறிதாகச் சொந்தக் கைகளால் சாந்து குழைத்து செங்கல்களைக் அடுக்கி, வீடு கட்ட ஆரம்பித்தார் மிண்ட்டு.
2010-இல் கட்டத் தொடங்கினாலும் இப்போதுதான் இறுதி நிலையை வீடு எட்டியுள்ளது. அடிப்படையில் மிண்ட்டு ஒரு விவசாயி. மிண்ட்டுவின் பொருளாதார நிலை கண்டு யாரும் வீடு கட்டிக்க கொடுக்க முன்வரவில்லை. அதனால் "டைட்டானிக் வீட்டை நானே கட்டிக் காட்டுகிறேன்' என்று கட்டடப் பணியைக் கற்றுக் கொண்டார். நேரம் கிடைக்கும்போது, டைட்டானிக் வீட்டைக் கட்ட ஆரம்பித்தார்.
டைட்டானிக் கப்பல் வீட்டின் நீளம் 39 அடி. அகலம் 13 அடி. உயரம் 30 அடி. இதுவரை வீட்டு கட்டுமானத்துக்கு ரூ.15 லட்சம் செலவாகியுள்ளது.
""அடுத்த ஆண்டு டைட்டானிக் வீட்டைக் கட்டி முடிப்பேன். இப்போதே சிலிகுரியில் டைட்டானிக் வீட்டைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். பலரும் வந்து அதிசயமாகப் பார்த்துச் செல்கிறார்கள். டைட்டானிக் கப்பல் வீட்டின் மேல் தளத்தில் உணவுவிடுதி ஒன்றை தொடங்குவேன். அதன் மூலம் என் குடும்பத்துக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் " என்கிறார் மிண்ட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


