தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

நேபாளத்தின் மறுபக்கம்..

உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் குட்டி நாடு நேபாளம்.

News image

நேபாளம்

Updated On :26 ஜூலை 2024, 4:33 pm IST

உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் குட்டி நாடு நேபாளம்.

நேபாளத்துக்கு விமானத்தில் சென்றால் அழகான பனிபடர்ந்த மலைகள், வனப் பகுதிகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகளைக் கண்டு ரசிக்கலாம்.

இங்குள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கு மிகவும் சிறப்புமிக்கது. நாட்டை ஆண்ட அரசர்கள் சிறப்புமிக்க, அழகிய கட்டடங்கள், கோயில்களை எழுப்பினர்.

கோயில்கள், மடங்கள், ஸ்தூபிகள்தான் நேபாளத்தில் செல்வம். பள்ளத்தாக்கில் இரு முக்கிய நதிகளான பாக்மதி, பிஷ்ணுமதி ஒன்றுசேரும் இடத்தில் 'காத்மாண்டு' தோன்றியது. ஒருகாலத்தில் 'கஸ்தா மண்டபம்' என்ற பெயரில் 'காத்மாண்டு' அழைக்கப்பட்டது. ஒரு பெரியமர வீட்டை கட்டி வியாபாரமும் நடைபெற்றது. பண்டமாற்றமும் உண்டு.

14-ஆம் நூற்றாண்டில் சிறிய இடங்களை இணைந்து காத்மாண்டை உருவாக்கியவர் ஜெயஸ்திடு என்ற மன்னர்.

19-ஆம் நூற்றாண்டில் ராணாக்கள் ஆட்சியைப் பிடித்ததும் கலைகள், கட்டடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர். காத்மாண்டுவின் புறநகரில் திவாரிகள் வாழ்ந்து வந்தனர். காத்மாண்டு பழையது, புதியது என இரு நகரங்களைக் கொண்டது. நாகரிகப் பாணி கட்டடங்களைக் கொண்டது புதியது. பழைய பாணி கட்டடங்கள் பழையது.

பக்தபூரில் மேல் கோபுரங்கள்

மரக்கூரைகளைக் கொண்ட ஒரு அற்புதமான பகோடா உள்ளது. உள்ளே தெய்வச்சிலைகள் உள்ளன. அவை இந்தியா தீபெத்-சீன கலாசாரத்தின் பிரதிபலிப்பு என பார்த்தாலே தெரியும். ஐந்து நிலை கொண்ட நியாயபோலா பகோடா கோயில் புவி அதிர்வுகள் பலமுறை ஏற்பட்டும் பாதிக்கப்படவில்லை.

ஸித்திலட்சுமி கோயில் ஒன்றும் உள்ளது. இதை மந்திரச் சக்திகள் நிறைந்த கோயில் என்று கூறுகின்றனர். தர்பார் சதுக்கத்தில் 55 ஜன்னல்களைக் கொண்ட பக்தபூர் அரண்மனை உள்ளது. இங்கு அழகிய கைவேலைப்பாடுகளைக் கொண்ட மர ஜன்னல்களைக் காணலாம். சில ஜன்னல்களோ புராணம், மதம், மலர் வடிவங்களைக் கொண்டவை.

நேபாளத்தில் பகோடா, ஷிகாரா, ஸ்தூபி ஆகிய மூன்று தனித்துவமான கட்டடக் கலைகளைக் காணலாம்.

முதலாவது பல அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் அளவு குறைந்து நேர்த்தியான குறுகலான கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு மட்டத்திலும் விரிவாகச் செதுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய இந்திய கட்டடக் கலையைப் பின்பற்றியும் நேபாளத்தில் கோயில்கள் எழுந்துள்ளன. பிரமிடுகளை நினைவூட்டும் உயரமான கோபுரங்கள், கற்சிற்பங்கள், வடநாட்டு ஷிகாரா பாணியை பசுபதிநாத் கோயிலின் குவிமாடம் வடிவஸ்தூபி பாணி, நேபாளத்தில் பேரரசர் அசோகாவால் நினைவூட்டுகின்றன.

பசுபதிநாத் கோயிலின் குவிமாடம் வடிவ ஸ்தூபி பாணி, பேரரசர் அசோகரால் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. ஒரு பரந்த அடித்தளம், மேல்நோக்கி குறுகலாக காத்மாண்டுவில் உள்ள பௌதநாத் ஸ்தூபி காணப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கு எழும்பும் மந்திரங்களும், தூபங்களின் வாசனையும் நம்மை கிறங்க வைக்கும்.

1952-ஆம் ஆண்டில் ஒரு கட்டடத்தின் பழைய செதுக்கப்பட்ட தூண்கள் விறகுகளாகப் பயன்படுத்துவதை ஒருவர் பார்த்தார். அதனைத் தடுத்தார். தன் நாட்டின் கலையே எரிக்கப்படுகிறது என்று வருந்தி அதுபோன்ற பழைய பாரம்பரிய ஜன்னல்கள், பிரேம்கள், தூண்கள், கதவுகளைச் சேகரித்து அதை வைத்தே ஒரு ஹோட்டலை கட்டினார் அவர்.

பொதுவாகவே நுணுக்கமான செதுக்கப்பட்ட ஜன்னல்கள், கதவுகள், தூண்கள் இன்றும் நேபாளத்தின் கடந்த கால பொக்கிஷங்களாகக் கூறப்படுகின்றன.

-ராஜி ராதா, பெங்களூரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.